ஏரோட்ரோம் விமான நிலையம். இந்தியாவின் லட்சத்தீவு பகுதியில் உள்ள அகத்தி தீவில் கட்டப்பட்ட விமான நிலையம் இது. இந்த விமான நிலையத்தின் ஓடுபாதையின் நீளம் 4,000 அடி மட்டுமே. மேலும், இது சுற்றிலும் நீர்.. நீர் நடுவே விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதனால் இந்த விமான நிலைய ஓடுபாதையில் விமானங்கள் தரையிறங்குவது என்பது விமானிக்கு ஒரு அக்னி பரீட்சையை போன்றது. ஏனெனில் சிறிய தவறு நேர்ந்தாலும் விமானம் அங்கிருந்து கடலில் மூழ்குவது உறுதி.