Countries that have rupees as a currency: இந்தியாவைப் போலவே இன்னும் பல நாடுகள் தங்கள் நாட்டுப் பணத்தை ரூபாய் என்று அழைக்கின்றன. அந்த நாடுகள் எவை என்று தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவில் பயன்படுத்தும் பணம் இந்திய ரூபாய் என அழைக்கப்படுகிறது. இதேபோல வேறு நாடுகளிலும் ரூபாய் என்ற பெயர் அந்தந்த நாடுகளின் பெயருடன் இணைத்து அறியப்படுகின்றன. பெயர் ஒன்றுபோல இருந்தாலும் அவற்றின் மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது
28
Pakistan Currency
பாகிஸ்தானில் புழக்கத்தில் உள்ளதும் ரூபாய் என்றுதான் அழைக்கப்படுகிறது. அது பாகிஸ்தானிய ரூபாய் (PKR) என்று அறியப்படுகிறது.
38
Nepal Currency
இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான நேபாளத்திலும் பணம் ரூபாய் பெயரில் தான் புழக்கத்தில் உள்ளது. அது நேபாள ரூபாய் (NPR) என அறியப்படுகிறது.
48
Sri Lankan Currency
இலங்கையில் பயன்படுத்தப்படும் பணத்தையும் ரூபாய் என்றுதான் அழைக்கிறார்கள். அது இலங்கை ரூபாய் (LKR) ஆகும்.
58
Maldives currency
மாலத்தீவியன் ரூபியா (MVR) என்பது சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற தீவு நாடான மாலத்தீவில் பயன்படுத்தப்படும் பணமாகும்.
68
Seychelles currency
சீஷெல்ஸ் ரூபாயை பயன்படுத்தும் இன்னொரு குட்டி தீவு நாடு. சீஷெலோயிஸ் ரூபாய் (SCR) என்பது இங்கு புழக்கத்தில் உள்ள பணம்.
78
Mauritius currency
மொரீஷியஸ் நாட்டிலும் ரூபாய்தான் மக்களிடையே புழக்கத்தில் இருக்கிறது. அந்நாட்டில் பணத்தின் பெயர் மொரீஷியன் ரூபாய் (MUR) ஆகும்.
88
Indonesia currency
இந்தோனேசியாவும் ரூபாயைத்தான் பயன்படுத்துகிறது. இந்தோனேசியன் ரூபியா (IDR) என்ற பெயரில் இந்தோனேஷியாவிலும் ரூபாய் புழக்கத்தில் உள்ளது.