கறாராகப் பேசும் மோடி:
பிரதமர் மோடி கறாராகப் பேசக்கூடியவர் என்று குறிப்பிட்ட வான்ஸ், அமெரிக்கா அவரை மதிக்க இதுவும் ஒரு காரணம் என்று கூறினார். உலகளாவிய வர்த்தகம் குறித்து, அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளை அவர் ஆதரித்தார். டிரம்பின் நடவடிக்கைகள் வர்த்தகப் போர் அல்ல, மாறாக அனைவருக்கும் பயனளிக்கும் மறுசீரமைக்கப்பட்ட அமைப்பு, குறிப்பாக இந்தியா போன்ற நெருங்கிய நண்பர்களுக்கு பயனளிப்பதாக அவர் கூறினார்.
இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தையும் வான்ஸ் பாராட்டினார், அதன் பண்டைய கட்டிடக்கலையையும் தொலைநோக்கு மனப்பான்மையால் வியப்படைந்ததாகக் கூறினார். QUAD உச்சிமாநாட்டை இந்தியா நடத்தவது பொருத்தமானது என்று அவர் வரவேற்பு தெரிவித்தார். இந்தியாவின் அணுசக்தி பொறுப்புச் சட்டத்தில் மாற்றங்களை ஆதரித்தார். அமெரிக்கா இந்தியாவை ஒரு சமமான பங்காளியாகப் பார்க்கிறது என்றும் வான்ஸ் கூறினார்.