Published : Apr 21, 2025, 01:16 PM ISTUpdated : Apr 21, 2025, 01:23 PM IST
ஷாங்காயில் தங்கத்தை உருக்கி பணம் வழங்கும் புதிய ஏடிஎம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏடிஎம் தங்க நகைகளை உருக்கி, அதன் எடைக்கு ஏற்ப பணத்தை வங்கிக் கணக்கிற்கு மாற்றுகிறது. இது தற்போது உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
சீனர்கள் புதுப்புது கண்டுபிடிப்புகளை கண்டுபித்து வருவது இயல்பான ஒரு விஷயம் தான். தற்போது அவர்கள் மேலும் ஒரு படியை எடுத்து வைத்துள்ளார்கள். அது வேறொன்றுமில்லை. தங்கத்தை உருக்கி பணம் தரும் ஏடிஎம் (ATM) வசதிதான் அது. இது புதிய சாதனையாக வந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
23
Shanghai Gold ATM
சீனாவின், ஷாங்காயில் உள்ள புதிய ஏடிஎம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த இயந்திரத்தை முதலில் சர்வதேச கவனத்திற்குக் கொண்டு வந்தவர் துருக்கிய தொழில்நுட்ப நிபுணர் டான்சு யெகன். ‘ஷாங்காயில் உள்ள தங்க ATM ஆனது தங்கத்தை உருக்கி, அதன் எடைக்கு ஏற்ப பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றுகிறது’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இந்த ATM-ல் உங்களிடம் உள்ள தங்கத்தை டெபாசிட் செய்து பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
33
China Gold ATM
.இந்த ATM-ல் தங்க நகைகளைச் செலுத்த வேண்டும். 1,200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தங்கம் ATM இயந்திரத்திலேயே உருகும். தங்கத்தின் தூய்மையை உடனடியாகக் கூறி, நேரடி விலையையும் காட்டும். வங்கிக் கணக்கு விவரங்களை உள்ளிட்டவுடன் அதற்கு ஏற்ற பணம் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். இந்த ATM-ன் இந்த அம்சங்களை வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்புகிறார்கள். இது எப்போது அனைத்து நகரங்களுக்கும் புழக்கத்தில் கிடைக்கும் என்பது தெரிவதில்லை.