மிரட்டும் AI போர் விமானம்! ரன்வே கூட தேவையில்ல.. அமெரிக்காவின் ஆளில்லா ஜெட் X-BAT!

Published : Oct 31, 2025, 08:54 PM IST

அமெரிக்காவின் ஷீல்ட் AI நிறுவனம், உலகின் முதல் முழுமையான தானியங்கி போர் விமானமான X-BAT-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. செங்குத்தாகப் புறப்பட்டு தரையிறங்கும் (VTOL) திறன் கொண்ட இந்த விமானம், 'Hivemind' AI மூலம் ஓட்டுநர் மற்றும் ஓடுபாதை இன்றி செயல்படுகிறது.

PREV
16
ஷீல்ட் AI X-BAT போர் விமானம்

போர் விமானப் போக்குவரத்தின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ஷீல்ட் AI (Shield AI), உலகிலேயே முதல் முழுமையான தானியங்கி போர் விமானத்தை அறிமுகம் செய்துள்ளது. செங்குத்தாகப் புறப்பட்டு, அப்படியே தரையிறங்கும் (VTOL) திறன் கொண்ட இந்த போர் விமானம் AI அமைப்புடன் செயல்படுகிறது.

'X-BAT' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம், ஓட்டுநர் இன்றி, பாரம்பரிய ஓடுபாதையும் இல்லாமல் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, செயற்கை நுண்ணறிவு (AI), தானியங்கி வசதிகளுடன் பாரம்பரிய விமானங்களால் அணுக முடியாத இடங்களிலிருந்தும் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகிறது.

26
ஹைவ்மைண்ட் AI

X-BAT போர் விமானத்தின் மையத்தில், ஷீல்ட் AI நிறுவனத்தின் 'Hivemind' எனப்படும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு அமைப்பு உள்ளது. ஜிபிஎஸ் (GPS) அல்லது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சூழல்களிலும் இந்த விமானம் தன்னிச்சையாக இயங்க இந்த அமைப்பு உதவுகிறது.

இது, செங்குத்து புறப்பாடு மற்றும் தரையிறங்கும் திறனுடன், உயர் செயல்திறன் கொண்ட ஒரு போர் விமானத்தின் வேகத்தையும் கொண்ட ஒரு வடிவமைப்பை ஒருங்கிணைக்கிறது.

36
தொழில்நுட்ப வலிமை மற்றும் திறன்

X-BAT ஒரு சிறிய, ஆனால் சக்திவாய்ந்த விமானமாகும். இது 12 மீட்டருக்கும் குறைவான இறக்கைகளைக் கொண்டுள்ளது. இது 50,000 அடிக்கு மேல் பறக்கக்கூடியது மற்றும் 2,000 கடல் மைல்களுக்கு (2000 nautical miles) மேல் பயணிக்கக்கூடியது.

அதிக அளவிலான போர் தளவாடங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. தாக்குதல் (Strike), வான் பாதுகாப்பு (Counter-Air), உளவுத் தகவல் சேகரிப்பு (Intelligence Gathering), மின்னணுப் போர் (Electronic Warfare) உள்ளிட்ட பல்வேறு பணிகளை இது செய்யக்கூடியது.

46
பூமியே எங்கள் ஓடுபாதை

X-BAT-இன் மிக முக்கியமான அம்சம் அதன் செங்குத்தாகப் புறப்பட்டு, செங்குத்தாக தரையிறங்கும் (VTOL) திறன் ஆகும். இந்தத் திறன் காரணமாக, இதற்கு விமானத் தளங்கள் அல்லது நீண்ட ஓடுபாதைகள் தேவையில்லை. கப்பல்கள், அல்லது தற்காலிக முகாம்களில் இருந்து இதை பயன்படுத்த முடியும்.

இதன் மூலம், பாரம்பரிய ஜெட் விமானங்களால் அணுக முடியாத பகுதிகளிலும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதை ஷீல்ட் AI நிறுவனம், ‘பூமியே எங்கள் ஓடுபாதை’ ('the earth is our runway') என்று விவரிக்கிறது.

56
எதிர்காலப் போர் முறை

X-BAT, மனிதர்களால் இயக்கப்படும் விமானங்களுடன் "துணை ட்ரோனாக" (Drone Wingman) இணைந்தும் செயல்பட முடியும். இது விமானிகளுக்கு சூழ்நிலை பற்றி கூடுதல் விழிப்புணர்வையும் அதிக தாக்குதல் திறனையும் வழங்கும்.

Manned-Unmanned Teaming எனப்படும் இந்த கூட்டுச் செயல்பாடு எதிர்கால வான்வழிப் போர் கட்டமைப்பை மாற்றியமைக்கும் எனக் கருதப்படுகிறது.

66
சவாலாகும் சர்வதேச விதிமுறைகள்

இந்த விமானம் எதிர்கால போர் தொழில்நுட்பம் பற்றி நம்பிக்கை அளித்தாலும், இதை பயன்படுத்துவதில் சவால்களும் உள்ளன. குறிப்பாக, முழுமையாக தானியங்கி அமைப்புகளை போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது சர்வதேச விதிமுறைகள் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories