சீனா ஹைட்ரஜன் அடிப்படையிலான புதிய ஆயுதத்தை சோதித்துள்ளது. இது அணு ஆயுதம் அல்ல என்றாலும், 1000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டது. சர்வதேச அணுசக்தி ஒப்பந்தங்களை மீறுவதாகவும், எதிர்காலப் போர்களில் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தையும் இந்த சோதனை எழுப்பியுள்ளது.
சீனா அணுசக்தி அல்லாத புதிய ஆயுதமாக ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதித்துள்ளது. சீன அரசு கப்பல் கட்டும் கழகத்தால் (CSSC) உருவாக்கப்பட்ட இந்த ஆயுதம், ஹைட்ரஜன் நிறைந்த பொருளான மெக்னீசியம் ஹைட்ரைடைப் பயன்படுத்தி மிகப்பெரிய தீப்பிழம்பை உருவாக்குகிறது. சீனாவின் இந்த ஹைட்ரஜன் குண்டு சோதனை சர்வதேச அணுசக்தி ஒப்பந்தங்களை மீறும் செயல் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
25
Hotter than 1,000°C
1000 டிகிரி செல்சியஸ் வெப்பம்:
இந்த குண்டு அணுசக்தியின் தேவை இல்லாமலே 1,000 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பத்தை உருவாக்கும் திறன் கொண்டது. இந்த வெப்பம் இரண்டு வினாடிகளுக்கு மேல் நீடிக்கும் என்றும் இது வழக்கமான வெடிபொருட்களை விட அதிகம் என்றும் கூறப்படுகிறது. வெறும் 2 கிலோகிராம் எடையுள்ளதாக இருந்தாலும், இது நொடியில் பேரழிவை உண்டாக்கும் சக்திவாய்ந்தது. ராணுவ சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பு மீதான துல்லியமான தாக்குதல்களை நடந்தத ஏற்றதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
35
China's military innovation
சீனாவின் ஆயுதங்கள்:
ஹைட்ரஜனை ஆற்றல் மூலமாகப் பயன்படுத்துவதன் மூலம், சீனா அடுத்த தலைமுறை ராணுவ கண்டுபிடிப்புகளுக்கான தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இதைத் தவிர மீத்தேனில் இயங்கும் இயந்திரங்கள், ஹைப்பர்சோனிக் அமைப்புகள் போன்ற மாற்று ஆயுதத் தொழில்நுட்பங்களிலும் சீனா கவனம் செலுத்துகிறது.
45
Future conflicts
எதிர்காலப் போர் குறித்த அச்சம்:
அணு ஆயுதங்களின் சுமை இல்லாத இந்த ஆயுதம் அதைவிட அழிவை ஏற்படுத்துவதாக உள்ளது. சீனாவின் இந்த சோதனை எதிர்காலத்தில் ஏற்படும் போர்களில் ஹைட்ரஜன் குண்டுகள் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தைத் தூண்டுவதாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக அணுசக்தி ஒப்பந்தங்களைப் புறக்கணிக்கும் வகையிலும் உள்ளது என அவர்கள் கருதுகின்றனர்.
55
Geopolitical tensions
அண்ணை நாடுகளின் கவலை:
தைவான் போன்ற பகுதிகளிலும், இந்தியா-சீனா எல்லையிலும் புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகமாக நிலவி வரும் நிலையில், சீனாவின் புதிய ஹைட்ரஜன் குண்டு சோதனை அண்டை நாடுகளிடையே பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்கள் தங்கள் பாதுகாப்பு தயார்நிலை மற்றும் தொழில்நுட்ப வசதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என வல்லுநர்லகள் கூறுகிறார்கள்.