சமீபத்தில், தென் கொரிய அதிபருடனான சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு பெரிய போர் ஏற்பட்டிருக்கும். ஆனால், அந்த போரை நான் உட்பட, உலகின் பல போர்களை நிறுத்தியுள்ளேன். அந்த போர் அணு ஆயுதப் போராக மாறியிருக்கும். ஏனென்றால், அந்தப் போரில் ஏற்கெனவே ஏழு போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன” என்று தெரிவித்தார்.
டிரம்ப் தனது தலையீட்டை விவரிக்கையில், “நீங்கள் எங்களுடன் வர்த்தகம் மேற்கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் இப்படி சண்டையிட்டுக் கொண்டால், உங்களுடன் எவ்வித வர்த்தகமும் மேற்கொள்ள மாட்டோம். உங்களுக்கு 24 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்குள் சண்டையை முடித்துக் கொள்ளவும் என்று அவர்களிடம் கூறினோம்” என்று குறிப்பிட்டார்.