Karthik Finds Evidence Against Chandrakala : கார்த்திகை தீபம் சீரியலில் கோயிலுக்கு சொந்தமான புதையல் நகைகளை திருடியது சந்திரகலா தான் என்பதை கார்த்திக் கண்டுபிடித்துவிட்டார்.
கார்த்திகை தீபம் சீரியலானது நாளுக்கு நாள் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத வகையில் பல சுவாரஸ்யமான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கோயிலுக்கு சொந்தமான புதையல் நகைகளை திருடுவதில் ஆரம்பித்து மகளிர் தினம் கொண்டாட்டம் வரையில் சீரியலில் வெளியான காட்சிகள் ரசிகர்களை கொண்டாட செய்தது. உதாரணத்திற்கு மகளிர் தினத்தை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் லேப்டாப், ஆட்டோ மற்றும் பண உதவிகளை செய்தார்.
25
Karthigai Deepam Serial Today Episode 10th March 2026
சாமுண்டீஸ்வரியின் நல திட்டங்களை கெடுக்கும் வகையில் சந்திரகலா பல திட்டங்களை வகுத்தார். அதில் முக்கியமான ஒன்று தான் லேப்டாப் வண்டியை கணவரை வைத்து கடத்தி சென்றார். பின்னர் கார்த்திக்கிற்கு என்ன நடந்தது என்பதை மயில்வாகனம் சொல்லவே உடனடியாக கார்த்திக் ஆக்ஷனில் இறங்கினார். எப்படியோ லேப்டாப் சப்ளை செய்த குடோனுக்கு சென்று டிரைவர் நம்பரை வாங்கி பின்னர் அவரை தேடி சென்றார்.
35
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்
பின்னர் வேன் டிரைவரை கண்டுபிடித்து என்ன நடந்தது என்பது பற்றி கேட்டார். அப்போது டிரைவர் எல்லா உண்மைகளையும் சொல்லவே, கார்த்திக் கடத்தப்பட்ட வேனை கண்டுபிடித்து விழா நடக்கும் இடத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, சிவனாண்டி தனது ரௌடிகளுக்கு போன் போட்டு வீட்டிற்கு சென்று ரேவதியை வைத்து கார்த்திக்கை பிளாக் மெயில் செய்ய சொன்னார். ரௌடியும் அப்படியே செய்யவே, சுவாதிக்கு கார்த்திக் ஐடியா கொடுக்க, அதைவே வைத்து ரௌடிகளை விரட்டியடித்தார்.
45
Chandrakala caught red-handed in Karthigai Deepam
பிறகு கார்த்திக் பிளான்படி லேப்டாப் வண்டியை விழா நடக்கும் இடத்திற்கு கொண்டு சென்றார். அதுமட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார். அதில் தனது மாமியாருக்கு விருது கொடுத்தார். இதைத் தொடர்ந்து கோயில் புதையல் நகைகளை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கினார். அப்போது முத்துவேலுவை பகடைக்காயாக வைத்து சந்திரகலாவை வைத்து காய் நகற்றினார்.
55
Karthikeyan traps Chandrakala video evidence
அதன்படி, கோயில் நகைகளை புதைக்க சொன்னவர் வீட்டிற்கு சென்று 100 சவரன் நகைகளை திரும்ப பெற்று கொண்டு வந்தார். இதையெல்லாம் அந்த ரௌடியின் மனைவி ரகசியமாக வீடியோ எடுத்து கார்த்திக்கிடம் கொடுத்துவிட்டார். அந்த வீடியோவில் சந்திரகலா இது கோயில் புதையல் நகை. முழுக்க முழுக்க என்னுடையது. எனக்கு சொந்தமானது என்று கூறியுள்ளார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து இன்று நடக்கும் எபிசோடில் பார்க்கலாம்.