ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபிஸில் பிளாக் பாஸ்டர் அடித்திருந்தது. அந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக வரலாறு சாதனை படைத்திருந்தது. மேலும் இந்த படம் கன்னடம், பர்மிய மொழி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.செய்யப்பட்டது. இந்த படத்தில் தான் மறைந்த பிரபல நடிகை சுஜாதா இறுதியாக நடித்திருந்தார்.
ஊனமுற்ற கோடீஸ்வரனாக சிவசங்கரும், அவரது மகன்கள் ஜீவா, விஷ்ணு என மூன்று தோற்றத்தில் வந்திருந்தார் அல்டிமேட் ஸ்டார். இதில் சிவசங்கர் பரதநாட்டிய கலைஞர் என்பதால் இவரை பெண்கள் புறக்கணிக்கின்றனர். இதற்கிடையே காயத்ரி என்ற பெண்ணை சிவசங்கருக்கு திருமணம் முடிக்க ஏற்பாடு செய்கின்றனர். அந்த பெண்ணோ இவர் பார்ப்பதற்கு பெண் போன்ற தோற்றத்தில் உள்ளார் எனக்கூறி நிராகரிக்கிறார். இதனால் கோபமடையும் சிவசங்கர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்கிறார். இதன் மூலம் இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. ஒரு குழந்தை தாயிடமும் ஒரு குழந்தை தந்தையிடமும் வளர்கிறது. இந்த படம் மிகுந்த பாராட்டுகளை பெற்றிருந்தது.