ரோகிணியால் தடுத்து நிறுத்தப்பட்ட மனோஜின் திருமணம்... வசமாக சிக்கிய விஜயா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

Published : Apr 20, 2026, 09:34 AM IST

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் திருமணம் செய்துகொள்ள உள்ள ஹரிணி, ரோகிணியின் பார்லருக்கு சென்றபோது அவருக்கு எல்லா உண்மையும் தெரியவந்துள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
15
Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தனக்கு டைவர்ஸ் கிடைத்துவிடும் என கூறியதை நம்பி, அவருக்கு பெண் பார்க்க சம்மதித்து இருந்தார் அண்ணாமலை. இதையடுத்து ஸ்வேதாவின் மூலம் ஒரு வரன் வந்தது. அமெரிக்காவில் மிகப்பெரிய பணக்காரராக இருப்பவரின் மகளை மனோஜுக்கு திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடந்து, இருவருக்கும் நிச்சயதார்த்தத்தையும் நடத்தி முடித்தனர். இதையடுத்து வருங்கால மனைவி ஹரிணியோடு அவுட்டிங் சென்றிருந்தார் மனோஜ், அப்போது ரோகிணி, ஹரிணியை சந்தித்து தனியாக பேச அழைத்திருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
உண்மையை சொன்ன ரோகிணி

ரோகிணியின் பார்லருக்கு ஹரிணி சென்றிருந்த நிலையில், அவருக்கு மனோஜ் தான் தன்னுடைய கணவர் என்கிற உண்மையை போட்டுடைக்கிறார் ரோகிணி. அதுமட்டுமின்றி ஹரிணியிடம் அழுது புலம்பிய அவர், தங்களுக்கு இன்னும் டைவர்ஸ் கூட கிடைக்கவில்லை என்கிற உண்மையை சொல்லிவிடுகிறார். கோர்ட்டில் மனோஜ் தனக்கு மாதம் 25 ஆயிரம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பதையும் சுட்டிக் காட்டி பேசி இருக்கிறார். இதையெல்லாம் கேட்டு ஷாக் ஆன ஹரிணி, தன்னுடைய பெற்றோரிடம் இந்த மேட்டரை கூறி இருக்கிறார். இதனால் ரோகிணி நிம்மதி அடைந்துள்ளார்.

35
முத்துவை சந்தித்த மீனாவின் அம்மா

மறுபுறம் மீனாவின் அம்மா, முத்துவை சந்தித்து பேசுகிறார். சத்யாவின் காதல் விஷயம் தொடர்பாக பேச வந்திருப்பதாக சொல்ல, அதற்கு முத்து, உங்களுக்கு இந்த விஷயம் எப்படி தெரியும் என கேட்க, மீனா தான் சொன்னா என கூறுகிறார். சொல்ல வேண்டாம் என சொல்லியும் உங்ககிட்ட சொல்லிருக்கால்ல என கோபப்படுகிறார் முத்து. பின்னர் தான் முத்துவிடம் கெஞ்சி கேட்கும் மீனாவின் அம்மா, நீங்க இந்த விஷயத்தில் தலையிடாதீர்கள் என சொல்கிறார். அந்த சிந்தாமணி ரொம்ப மோசமானவள் அவளுடைய பொண்ணுக்கு என் பையனை கொடுக்கமாட்டேன் என திட்டவட்டமாக கூறுகிறார்.

45
மீனாவுக்கு முத்து கொடுத்த சர்ப்ரைஸ்

பின்னர் வீட்டுக்கு சென்று மீனாவிடம் ஏன் உங்க அம்மாகிட்ட இந்த விஷயத்தை சொன்ன என கேட்டு சண்டைபோடுகிறார் முத்து. அதற்கு மீனா, அந்த சிந்தாமணி பற்றி உங்களுக்கு தெரியாது என சொல்ல, ரேகா நல்ல பொண்ணு தான என முத்து கேட்கிறார். அவ நல்ல பொண்ணு தான், ஆனால் அவளுடைய அம்மா, சத்யாவை பழிவாங்காம விடமாட்டாங்க என சொல்கிறார். பின்னர் மீனாவுக்கு சர்ப்ரைஸாக தான் வாங்கி வந்த கிஃப்டை கொடுக்கிறார் முத்து. மீனா, பல நாட்களாக கழுத்தில் தங்க செயின் இல்லாமல் இருந்த நிலையில், அவருக்கு தங்க செயின் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார்.

55
உடையும் உண்மைகள்

இதை வீட்டில் உள்ளவர்களிடம் காட்டி சந்தோஷப்படுகிறார் முத்து. அப்போது ஹரிணியின் அம்மா, அப்பா அங்கு வருகிறார்கள். அவர்கள் அண்ணாமலையிடம் நீங்க இப்படி ஏமாத்துவீங்கனு எதிர்பார்க்கல என கூறுகிறார். உங்க பையன் மனோஜுக்கு டைவர்ஸ் கிடைக்கும்னு ஏன் பொய் சொன்னீங்க, கோர்ட்ல என்ன நடந்திருக்கு தெரியுமா என விஜயாவும் மனோஜும் மூடி மறைத்த உண்மையெல்லாம் சொல்கிறார். இதனால் மனோஜின் திருமணத்துக்கு எண்டு கார்டு போட்டுள்ளார்கள் போல தெரிகிறது. இதையடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories