ரிலீசுக்கு முன்னாடியே இப்படியா! மீண்டும் லீக்கான ஐபோன் SE 4 டிசைன்!

Published : Jan 28, 2025, 11:41 PM IST

iPhone SE 4 leaks: ஐபோன் SE 4 ஸ்மார்ட்போனை ஆப்பிள் நிறுவனம் ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பே அதைப் பற்றிய அப்டேட்டுகள் கசிந்து வருகின்றன. இப்போது ரியர் பேனல் டிசைன் எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவிட்டது.

PREV
16
ரிலீசுக்கு முன்னாடியே இப்படியா! மீண்டும் லீக்கான ஐபோன் SE 4 டிசைன்!
iPhone SE 4

சமீபத்தில் கசிந்துள்ள புகைப்படங்கள், வரவிருக்கும் iPhone SE 4 இன் பின்புற பேனல் வடிவமைப்பு வெளிப்படுத்தி உள்ளன. 2022ஆம் ஆண்டு வெளியான iPhone SE க்குப் பிறகு அதன் புதிய மாடல் வெளியாக உள்ளது.

26
iPhone SE 4

ஆப்பிளின் மிகவும் மலிவு விலை மொபைலான இது குறிப்பிடத்தக்க ஹார்டுவேர் மாற்றங்களைக் கொண்டிருக்கலாம். இதுபற்றி டிப்ஸ்டர் @MajinBuOfficial பகிர்ந்துள்ள படங்கள், iPhone 16 மற்றும் iPhone SE 4 மொபைல்களின் தோற்றத்தைக் காட்டுகின்றன.

 

36
iPhone SE 4

கசிந்த புகைப்படங்கள்  iPhone SE 4 டம்மி யூனிட்டைக் காட்டுகின்றன. அதனால்தான் பின்புற பேனலில் ஆப்பிளின் லோகோ இல்லை. படங்கள் போனின் டிஸ்ப்ளே பற்றிய விவரங்களை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும், ஒரு விஷயம் தனித்து நிற்கிறது: ஐபோன் SE 4 அதன் முந்தைய மாடலைப் போலவே ஒரே பின்புற கேமராவைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

46
iPhone SE 4

ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது ஐபோன் SE 4 இல் பெரிய கேமரா பம்ப் இருப்பது படங்களில் தெரிகிறது. கூடுதலாக, பவர் பட்டன் தொலைபேசியின் வலது பக்கத்தில் தெரிகிறது. ஐபோன் SE 3 இல் பயன்படுத்தப்படும் A15 பையோனிக் சிப்பை விட செயல்திறன் மிக்க A18 சிப் ஐபோன் SE 4 மொபைலில் இருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

56
iPhone SE 4

புதிய சிப்புடன், ஐபோன் SE 4 இல் 8GB RAM இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இத்துடன் ஆப்பிளின் மேம்பட்ட பல வசதிகளும் புதிய ஐபோன் SE 4 இல் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. முந்தைய மாடலின் சிறிய 4.7-இன்ச் டிஸ்ப்ளேவுக்கு விடைகொடுத்து 6.06-இன்ச் LTPS OLED டிஸ்பிளே அறிமுகம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

66
iPhone SE 4

48 மெகாபிக்சல் பின்புற கேமராவை இருக்கலாம் சொல்லப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், முக்கியமான அப்டேடாக இருக்கும். iPhone SE 4 இன்-ஹவுஸ் 5G மோடம் கொண்ட முதல் ஆப்பிள் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் ஓர் அறிக்கை சொல்கிறது. இது பயனர்களுக்கு மேம்பட்ட இன்டர்நெட் இணைப்பை வழங்கும். இப்படி பல அப்டேட்டுகள் வந்துகொண்டிருந்தாலும், ​​iPhone SE 4 வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ரிலீஸ் தேதி நெருங்கும்போது, வடிவமைப்பு மற்றும் பிற அம்சங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.

click me!

Recommended Stories