பேட்டரி: நீண்ட நேரம் உழைக்கும் ஸ்மார்ட்போன்!
ஐபோன் 16, 22 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் நேரத்தை வழங்கியது. ஐபோன் 17-ல் மேம்படுத்தப்பட்ட பேட்டரி ஆயுள் மற்றும் வேகமான சார்ஜிங் வசதியை எதிர்பார்க்கலாம்.
ஐபோன் 17: காத்திருக்கலாமா? அப்டேட் செய்யலாமா?
ஐபோன் 16 ஏற்கனவே மேம்படுத்தப்பட்ட கேமரா, பேட்டரி மற்றும் செயல்திறனை கொண்டுள்ளது. ஆனால், ஐபோன் 17 சிறந்த செல்ஃபி கேமரா, வேகமான A19 சிப் மற்றும் 120Hz திரையை வழங்கலாம். ஆப்பிள் என்ன புதுமைகளை கொண்டு வரப்போகிறது என்பதை செப்டம்பர் 2025 வரை காத்திருந்து பார்க்க வேண்டும்.