ஜியோ, ஏர்டெல் ஆகியவை ரூ.3,599க்கு ஆண்டு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகின்றன. இவை 365 நாட்கள் செல்லுபடியாகும், தினமும் 2 முதல் 2.5GB வரை டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், தினமும் 100 SMSகளை வழங்குகின்றன. இவற்றுடன் ஜியோ கூடுதலாக JioTV, JioCinema, JioCloud போன்ற டிஜிட்டல் சேவைகளை இலவசமாக வழங்குகிறது.
ஏர்டெல் Wynk Music, Hellotunes, Apollo 24/7 போன்ற சேவைகளை வழங்குகிறது. மறுபுறம் விஐ (Vi) ரூ.3,699க்கு ஆண்டு திட்டத்தை வழங்குகிறது. இதில் தினமும் 2GB டேட்டாவுடன், அமேசான் பிரைம் சந்தா, வரம்பற்ற இரவு டேட்டா, வார இறுதி டேட்டா ரோல்ஓவர் போன்ற சிறப்பு அம்சங்களை வழங்குகிறது.