வாட்ஸ்அப் ஸ்க்ரீன் ஷேரிங் வசதி வந்தாச்சு! 2 மாத காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த அப்டேட்!

First Published | Aug 9, 2023, 6:45 PM IST

வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷேர் வசதியை ஏறக்குறைய இரண்டு மாதங்கள் பீட்டாவில் சோதித்த பிறகு, இறுதியாக அதை உலகம் முழுவதும் உள்ள அனைத்து பயனர்களுக்கும் வெளியிட்டிருக்கிறது. இந்த அம்சம், வீடியோ காலில் உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் திரையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. ஆனால், எல்லாவற்றையும் பகிர முடியாது. வாட்ஸ்அப் பாதுகாப்பு காரணம் கருதி சில கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கிறது.

வாட்ஸ்அப் புதிய ஸ்க்ரீன் ஷேர் அம்சம், தற்போதைய வீடியோ அழைப்பின் போது பயனர்கள் தங்கள் தொலைபேசி அல்லது லேப்டாப் திரையை மற்ற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.

வாட்ஸ்அப்பில் ஸ்கிரீன் ஷேர் வசதியை வீடியோ அழைப்புகளின் போது மட்டுமே செயல்படும். இது தனிப்பட்ட மற்றும் குரூப் காலிங் இரண்டிற்கும் பயன்படுத்த முடியும்.

Latest Videos


ஸ்கிரீன் ஷேர் மூலம் பயனர்கள் தங்கள் ஃபோன் அல்லது லேப்டாப்பில் உள்ள கோப்புகள், இணையப் பக்கங்கள், வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் பிற விஷயங்களை பிறர் பார்வைக்குக் காட்டலாம்.

வாட்ஸ்அப் வங்கி பயன்பாடுகள் மற்றும் பிற தனியுரிமை சேவைகள் தொடர்பான சில முக்கிய அம்சங்களில் ஸ்கிரீன் ஷேர் செய்ய முடியாது. பாஸ்வேர்டு அல்லது பின் நம்பரை டைப் செய்யும்போது இந்த வசதி வேலை செய்யாது. ஆனால், இது மொபைலுக்கு மட்டுமே பொருந்தும்.

ஸ்கிரீன் ஷேர் அம்சத்தை திரை செங்குத்தாக இருக்கும்போது கிடைமட்டமாக இருக்கும்போதும் பயன்படுத்த முடியும். தேவையான கோணத்தில் மொபைல் அல்லது டேப்லெட்டை திருப்பி வைத்து பயன்படுத்தினால், அதற்கு ஏற்ப திரையில் மாற்றம் செய்யப்படும்.

லேப்டாப்பில் பயன்படுத்தும்போது ஒரு குறிப்பிட்ட விண்டோவை மட்டும் பகிரும் வகையில் தேர்வு செய்து அதை மட்டும் பகிரும் வகையில் பயன்படுத்தலாம். அல்லது முழு திரையையும் பகிர தேர்வு செய்யலாம்.

ஸ்கிரீன் ஷேர் செய்துகொண்டிருக்கும்போது பயனர்கள் ஸ்கிரீன் ஷாட்களைப் படம்பிடித்து தங்கள் தேவைக்கேற்ப அதைப் பயன்படுத்தலாம்.

பிற அப்ளிகேஷன்களில் உள்ளதைப் போலவே ஸ்கிரீன் ஷேரிங் மூலம் OTT தளங்களை பகிர முடியாது. அப்படிப் பகிர முயன்றால் திரை வெறும் கருப்பு நிறத்தில்தான் தோன்றும்.

ஸ்கீன் ஷேர் செய்யும்போது வீடியோ அல்லது ஆடியோவை ப்ளே செய்தால், அப்போது அதன் திரையில் தெரிவதை மட்டுமே பிறர் பார்க்க முடியும். ஓடிக்கொண்டிருக்கும் ஆடியோவை கேட்க முடியாது.

click me!