மொபைல் ஸ்கிரீன் பிரைட்னஸ் இவ்வளவு தான் வேண்டும்? உடனே டிஸ்பிளே செட்டிங்ஸை மாற்றுங்க!

First Published | Jul 20, 2023, 9:06 PM IST

எட்டு மணிநேரம் லேப்டாப் முன்பு அமர்ந்து வேலை செய்துவிட்டு, ஓய்வு நேரத்திலும் மொபைல் பார்த்துக்கொண்டிருக்கும் இன்றைய தலைமுறையில், இளம் வயதிலேயே கண்பார்வை பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சூழல் நிலவுகிறது.

பிரைட்னஸ் பிரச்சினைக்குத் தீர்வு

கண் பாதிப்புகளைக் குறைக்க, திரையின் வெளிச்சத்தை மிகக் குறைவாக வைத்திருப்பதே தீர்வு என்று பலர் நினைக்கிறார்கள். இது உண்மையா? கண் குறைபாடுகளைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

மிகவும் குறைந்த பிரைட்னஸ் வைக்கலாமா?

டிஸ்பிளே பிரைட்னஸ் குறைந்தபட்ச அளவில் வைத்திருப்பது சிறந்த விஷயம் என்று பலர் நம்புகிறார்கள். பகலில்கூட நைட் மோடில் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஒளியியல் வல்லுநர்கள் இதை ஏற்கவில்லை.

Tap to resize

குறைந்தபட்ச பிரைட்னஸ் ஏன் கூடாது?

மிகவும் மங்கலான அளவுக்கு பிரைட்னஸ் குறைக்கப்பட்டாலும், கண்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். கொஞ்சம் கடினமாக கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் நீண்டகால பயன்பாட்டில் கண்ணுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம். சிலருக்கு தலைவலிக்கும் வழிவகுக்கும்.

அதிக பிரைட்னஸ் இருக்கலாமா?

குறைவான பிரைட்னஸ் மூலம் கண் பாதிப்பு ஏற்படும் என்றால் அதை அதிக பிரைட்னஸ் வைக்க வேண்டுமா என்றால் அதுவும் உகந்ததல்ல. பிரைட்னஸ் 50 சதவீதத்திற்கும் அதிகமாக வைத்திருந்தாலும், இன்னும் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் ஆபத்து இருக்கிறது. கண் சோர்வு, கண் எரிச்சல் மற்றும் கண் வறட்சி போன்ற பல குறுகிய கால பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

சிறப்பான பிரைட்னஸ் செட்டிங்ஸ் எது?

மொபைல் டிஸ்பிளே பிரைட்னஸ் சுற்றுப்புறத்தில் உள்ள வெளிச்சத்தைப் பொறுத்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மொபைல் ப்ரைட்னஸ் சுற்றுப்புறத்தில் உள்ள வெளிச்சத்துக்குச் சமமாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். சுற்றுப்புற வெளிச்சமும் மொபைல் பிரைட்ஸ் அளவும் ஒன்றாக இருந்தால் கண்களுக்கு குறைந்தபட்ச சேதத்தை ஏற்படுத்தும்.

இரவில் என்ன செய்யலாம்?

உறங்கும் நேரத்தில் உங்கள் திரையைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. மொபைல் பார்க்கும்போது தூக்க ஹார்மோனான மெலடோனின் பாதிப்பதால், அது தூக்கத்தைச் சீர்குலைக்கும் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல; கவனச்சிதறல் மற்றும் நினைவாற்றல் குறைபாடும் ஏற்படலாம். இரவில் டிஸ்பிளே பார்த்துக்கொண்டு இருந்தாலும், அப்போது அறை விளக்குகளைப் போட்டுக்கொள்வது நல்லது.

நினைவில் கொள்ளவேண்டியது

மொபைல், லேப்டாப், போன்ற டிஜிட்டல் ஸ்கிரீன் கொண்ட கருவிகளை பார்த்துக்கொண்டு வேலை பார்ப்பவர்கள் 20-20-20 விதியை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. திரையில் 20 நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தால், அடுத்த 20 வினாடி ஓய்வு எடுத்துக்கொண்டு, 20 அடி தூரத்தில் பார்வையைச் செலுத்த வேண்டும். இந்த 20-20-20 விதி கண் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

Latest Videos

click me!