Tech Tips: போன் பேசும்போது இரைச்சலாக இருக்கிறதா? எப்படி தவிர்ப்பது? இதோ எளிய வழிகள்!

Published : Feb 09, 2025, 05:06 PM IST

மற்றவர்களிடம் போன் பேசும்போது நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனை வெளிப்புற இரைச்சல். இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

PREV
14
Tech Tips: போன் பேசும்போது இரைச்சலாக இருக்கிறதா? எப்படி தவிர்ப்பது? இதோ எளிய வழிகள்!
Tech Tips: போன் பேசும்போது இரைச்சலாக இருக்கிறதா? எப்படி தவிர்ப்பது? இதோ எளிய வழிகள்!

ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். நாம் இப்போது பல அன்றாடப் பணிகளுக்கு ஸ்மார்ட்போன்களையே நம்பியிருக்கிறோம். குரல் அழைப்புகள் செய்வதிலிருந்து வீடியோ அழைப்புகள், ஆவணப் பகிர்வு, ஆன்லைன் பணம் செலுத்துதல், பொழுதுபோக்கு போன்ற பல நோக்கங்களுக்காக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகிறோம். 

இப்போது ஆண்ட்ராய்ட் போனில் கிடைக்கும் ஒரு சூப்பர் அம்சத்தை பற்றி தெரிந்து கொள்வோம். அது அன்றாட வேலையில் உங்களுக்கு பெரிதும் உதவும். பல நேரங்களில் நாம் வெளியில் அல்லது நெரிசலான இடங்களில் இருக்கும்போது சத்தம் காரணமாக போன் கால்ஸ்களை செய்வது கடினம். சத்தம் காரணமாக எதிர்முனையில் அழைப்பில் இருப்பவரால் உங்கள் குரலை சரியாகக் கேட்க முடியாமல் போகலாம். 

24
போன் பேசும்போது இரைச்சல்

அத்தகைய சூழ்நிலைகளில் எதிர்முனையில் இருப்பபரிடம் முக்கியமான ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீகள். ஆனால் இரைச்சல் காரணமாக உங்களால் சொல்ல முடியவில்லை. இது பொதுவாக எல்லோரும் சந்திக்கும் பிரச்சனை ஆகும். இருந்தாலும் இந்த பிரச்சனைக்கு ஒரு எளிய தந்திரம் உள்ளது. பின்னணி ஒலி சிக்கலை பிரச்சனையை முற்றிலுமாக எப்படி தீர்ப்பது? என்பது குறித்து பார்க்கலாம்.

கால்ஸ் செயும்போது பின்னணி ஒலி பிரச்சனையில் இருந்து விடுபட, மூன்றாம் தரப்பு பயன்பாட்டின் உதவியை நீங்கள் பெற வேண்டியதில்லை. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பின்னணி ஒலியை நீக்கும் சிறந்த வசதி உள்ளது. இது குறித்து பலருக்கு விழிப்புணர்வு இல்லை. இந்த அம்சத்தை செயல்படுத்துவதன் மூலம் இந்த சிக்கலில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம். இரைச்சலைக் குறைக்க எந்த மூன்றாம் தரப்பு செயலியின் உதவியையும் நீங்கள் பெறத் தேவையில்லை என்பதுதான் இதன் சிறப்பாகும்.

OnePlus 13 Mini: புது போனை களமிறக்கும் ஒன்பிளஸ்; எப்போது அறிமுகம்? சிறப்பம்ச‌ம் என்ன?

34
ஸ்மார்ட்போன்கள்

ஆண்ட்ராய்டு தனது பயனர்களுக்கு Clear Call எனும் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் உங்கள் குரலை அனைத்து வகையான பின்னணி இரைச்சலிலிருந்தும் தனிமைப்படுத்துகிறது. சில காலத்திற்கு முன்பு இந்த அம்சம் இயர்போன்கள் மற்றும் பட்களில் கிடைத்தது. ஆனால் தற்போது இந்த வசதி ஸ்மார்ட்போன்களிலும் வந்துள்ளது. இந்த அம்சத்தை இயக்குவதன் மூலம், நெரிசலான இடங்களிலிருந்தும் நீங்கள் எளிதாக கால்களை செய்ய முடியும்.

44
டெக்னாலஜி டிப்ஸ்

கால் செய்யும்போது இரச்சலை தவிர்க்கும் Clear Call வசதியை ஸ்மார்ட்போனில் எப்படி ஆக்டிவேட் செய்வது? 

* முதலில் உங்கள் ஸ்மார்ட்போன் அமைப்புகளுக்குச் (settings) செல்லவும்.

* பின்பு கீழே ஸ்க்ரோல் செய்து ஒலி மற்றும் அதிர்வுகள் விருப்பத்தை (Sound and Vibrations option) கிளிக் செய்ய வேண்டும்.
* இப்போது நீங்கள் ஒலிகள் மற்றும் அதிர்வு விருப்பத்தில் தெளிவான குரல் (Clear Voice option in the Sounds and Vibration option) என்ற ஆப்ஷனை காண்பீர்கள். 

* இதனைத் தொடர்ந்து நீங்கள் இரச்சலை அகற்ற தெளிவான குரல் நிலைமாற்றத்தை (Clear Voice toggle) க்ளிக் செய்ய வேண்டும். 

பல ஸ்மார்ட்போன்களில் அழைப்பை மேற்கொள்ளும்போது இந்த அம்சம் முகப்புத் திரையிலேயே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வாட்ஸ் அப்‍-க்கு ஆபத்து; அபாயகரமான 'ஸ்பைவேர்' அட்டாக்! மொபைலில் உடனே இதை செய்யுங்க!
 

click me!

Recommended Stories