ஆதார், பான் கார்டு தகவல்கள் கசிவதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

First Published | Sep 30, 2024, 1:40 PM IST

அரசு பான் மற்றும் ஆதார் அட்டைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இருப்பினும், தகவல் கசிவு சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இதைத் தவிர்ப்புது எப்படி என்று பார்க்கலாம்.

Tax Saving Investments To Aadhaar-Pan Linking- Complete These Tasks Before March 31

நம் நாட்டில் ஆதார் மற்றும் பான் மிக முக்கியமான ஆவணங்கள். இவை அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படுகின்றன. வங்கி பரிவர்த்தனைகள் முதல் அரசாங்கங்கள் வழங்கும் நலத் திட்டங்களின் பலன்களைப் பெறுவது வரை, இந்த இரண்டு ஆவணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பெயர், வயது, முகவரி, தொடர்பு எண் போன்ற குடிமக்களின் தனிப்பட்ட தகவல்கள் இந்தக் கார்டுகளில் அடங்கும். அதனால்தான் இந்திய அரசு குடிமக்களின் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டைகளின் பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. இருப்பினும், ஆதார், பான் கார்டு தகவல்கள் கசிந்ததாக அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

Latest Videos


Aadhaar -pan card linking

சமீபத்தில், சில இணையதளங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு விவரங்களை வெளியிட்டது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியன் ஏரோஸ்பேஸ் மற்றும் இன்ஜினியரிங் மற்றும் தி ஸ்டார் கிட்ஸ் ஆகிய இரண்டு இணையதளங்கள் பொதுமக்களின் ஆதார் தரவை வெளியிட்டது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்தியன் ஏரோஸ்பேஸ் மற்றும் இன்ஜினியரிங் இணையதளம் செப்டம்பர் 26ஆம் தேதி வரை பலரது தனிப்பட்ட தகவல்களைக் கசிய விட்டிருக்கிறது. ஸ்டார் கிட்ஸ் இணையதளம் குழந்தைகளின் ஆதார் விவரங்களைப் அம்பலப்படுத்தியது.

Aadhaar Card Update Deadline Extended Till June 14

சமூக ஊடகங்கள் மூலம் இந்தத் தகவல் கசிவு வெளிச்சத்திற்கு வந்தது. ஆதார் ஆணையமும் மற்றும் இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழுவும் (CERT-In) இணைந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி தகவல் கசிவை உறுதி செய்தன. இதன்படி, இரண்டு இணையதளங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தரவு பாதுகாப்பு குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "வெளிப்படையான, பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பான இணையத்தை வழங்குவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.

சில இணையதளங்கள் குடிமக்களின் ஆதார் மற்றும் பான் விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்களை அம்பலப்படுத்துவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு தடை செய்துள்ளோம். குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பிற்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

ஆதார் மற்றும் பான் விவரங்களைக் கசிய விட்ட இணையதளங்களை இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் ஆதார் மற்றும் பான் கார்டில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைக் கண்டறிந்து, தீர்வு நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது.

click me!