Car Maintenance: கார் வாங்கிய முதல் நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை என்னென்ன செலவு வரும்? முழு கணக்கு இதோ!

Published : Sep 18, 2026, 11:45 AM IST

Car Maintenance : கார் வாங்கிய பிறகு செலவு EMI-யுடன் முடிவதில்லை. 5 ஆண்டுகளில் எரிபொருள், இன்சூரன்ஸ், சர்வீஸ், டயர், பேட்டரி, பிரேக், டோல், பார்க்கிங் உள்ளிட்ட என்னென்ன செலவுகள் வரும்? முழு விவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
111
கார் வாங்கிய பிறகும் செலவு

கார் வாங்கும்போது எக்ஸ்-ஷோரூம் விலை அல்லது ஆன்-ரோடு விலையை மட்டும் பார்த்தால் போதாது. கார் வாங்கிய பிறகும் தொடர்ந்து பல செலவுகள் வரும். முதல் நாளிலிருந்தே இன்சூரன்ஸ், எரிபொருள், சர்வீஸ், FASTag, பார்க்கிங் , மாத EMI போன்ற செலவுகள் இருக்கும். காலப்போக்கில் டயர், பேட்டரி, பிரேக் பாகங்கள் போன்றவற்றையும் மாற்ற வேண்டியிருக்கும்.

கார் வாங்கும் முன் அதன் விலை எவ்வளவு? என்பதைத் தான் முதலில் பார்க்கிறோம். ஆனால், அந்தக் காரை வாங்கிய பிறகு அடுத்த 5 ஆண்டுகளில் என்னென்னெ செலவு வரும் என்பதை யோசித்திருக்கிறோமா?

211
கார் வாங்கிய முதல் நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை வரும் செலவுகள்

கார் வாங்கும் போது எக்ஸ் ஷோரூம் விலை செலுத்தினால் மட்டும் போதாது. கார் உங்கள் பெயரில் பதிவு செய்து, சாலையில் ஓட்டுவதற்கு தேவையான பல்வேறு கட்டணங்களும் சேரும். இதுதான் பொதுவாக ஆன் ரோடு விலை எனப்படுகிறது.

இதில் காரின் எக்ஸ் ஷோரூம் விலை, RTO பதிவு கட்டணம், சாலை வரி, இன்சூரன்ஸ் போன்ற முக்கிய செலவுகள் இடம்பெறும். இதுதவிர, சில கார்களுக்கு ஹேண்ட்லிங் அல்லது பிற டீலர் கட்டணங்கள், FASTag, ஆக்சஸரீஸ் போன்ற கூடுதல் செலவுகளும் இருக்கலாம்.

311
முதல் ஆண்டில் முக்கிய செலவு – இன்சூரன்ஸ்

புதிய காருக்கு இன்சூரன்ஸ் என்பது தவிர்க்க முடியாத செலவு. ஒவ்வொரு ஆண்டும் பாலிசியை புதுப்பிக்க வேண்டியிருக்கும். இன்சூரன்ஸ் பிரீமியம் எல்லா கார்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. காரின் மாடல், அதன் IDV மதிப்பு, இன்ஜின் திறன், உரிமையாளரின் முந்தைய claim history ஆகியவற்றைப் பொறுத்து பிரீமியம் மாறும்.

மேலும், Zero Depreciation, Engine Protection, Roadside Assistance போன்ற add-on covers-ஐ தேர்வு செய்தால் கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.

ஒரு ஆண்டில் இன்சூரன்ஸ் claim செய்யாமல் இருந்தால், அடுத்த ஆண்டில் No Claim Bonus (NCB) கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த ஆண்டுக்கான own-damage premium குறையலாம். எனவே, சிறிய பழுது ஏற்பட்டால் உடனே insurance claim செய்வதற்கு முன், claim செய்தால் NCB-ல் ஏற்படும் மாற்றம் மற்றும் கிடைக்கும் நன்மை என்ன என்பதை கணக்கிட்டு முடிவு செய்வது நல்லது.

411
பெட்ரோல், டீசல், CNG செலவு

கார் வைத்திருப்பதில் அதிகம் சேரக்கூடிய செலவுகளில் ஒன்று எரிபொருள். உதாரணமாக, ஒரு கார் ஆண்டுக்கு 10,000 கி.மீ. ஓடி, சராசரியாக 15 km/l மைலேஜ் கொடுத்தால், ஆண்டுக்கு சுமார் 667 லிட்டர் எரிபொருள் தேவைப்படும். 5 ஆண்டுகளில் இது சுமார் 3,333 லிட்டராக இருக்கும். எனவே, கார் வாங்கும் முன் வருடத்திற்கு எவ்வளவு தூரம் ஓட்டுவோம் என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்வது முக்கியம்.

511
சர்வீஸ் செலவு

புதிய கார் என்றாலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்வது அவசியம். ஆனால் எந்த கார் எத்தனை கி.மீ.க்கு சர்வீஸ் செய்ய வேண்டும் என்பது காரின் மாடல் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தைப் பொறுத்து மாறும். பொதுவாக சர்வீஸில்,

  • என்ஜின் ஆயில்(Engine oil)
  • ஆயில் ஃபில்டர் (Oil filter)
  • ஏர் ஃபில்டர் (Air filter)
  • கேபின் ஃபில்டர் (Cabin filter)
  • பிரேக் ( Brake)
  • கூலன்ட் (Coolant check)
  • பேட்டரி (Battery check)
  • டயர்கள் ( Tyre inspection)
  • வீல் அலைன்மென்ட் Wheel alignment) உள்ளிட்டவையும் சரிபார்க்கப்படலாம்.
611
டயர் செலவை மறக்காதீர்கள்

கார் வாங்கும்போது பலரும் டயர் செலவை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. டயரின் ஆயுள் ஒரே மாதிரியாக இருக்காது. ஓட்டும் முறை, சாலை நிலை, வீல் அலைன்மென்ட், டயர் பிரஷர் மற்றும் காரை எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறோம் என்பதன் அடிப்படையில் டயர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது மாறுபடும். 5 ஆண்டுகளுக்குள் டயர்களை மாற்ற வேண்டிய சூழல் வரலாம். குறிப்பாக அதிகமாக கார் ஓட்டுபவர்கள் இதற்காக தனியாக பணம் ஒதுக்குவது நல்லது.

711
பேட்டரி செலவு

காரின் பேட்டரியும் நிரந்தரமாக இருக்காது. அதன் ஆயுள் காரின் பயன்பாடு, வானிலை, மின்சார பயன்பாடு மற்றும் பேட்டரி வகை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். 3–5 ஆண்டுகளுக்குள் பேட்டரியை மாற்றுவதற்கான செலவும் வரக்கூடும் என்பதையும் உரிமையாளர்கள் கணக்கில் வைத்திருக்க வேண்டும்.

811
Brake, Suspension, AC போன்ற செலவுகள்

காரை அதிகமாக பயன்படுத்தும்போது, சில தேய்மான பாகங்களை (Wear & Tear Parts) குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மாற்ற வேண்டியிருக்கும். இதில் பிரேக் பேட், பிரேக் டிஸ்க், வைப்பர், சஸ்பென்ஷன் பாகங்கள், பெல்ட்கள், பல்புகள் போன்றவை அடங்கும்.

மேனுவல் கார்களில் கிளட்ச் பாகங்களுக்கும் காலப்போக்கில் செலவு ஏற்படலாம். AC ஃபில்டர் உள்ளிட்ட சில AC பாகங்களையும் தேவைக்கேற்ப பராமரிக்க அல்லது மாற்ற வேண்டியிருக்கும்.

911
FASTag மற்றும் Toll செலவு

நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு டோல் கட்டணமும் தொடர்ந்து வரும் செலவாக இருக்கும். NHAI-யின் தகவலின்படி, தகுதியுள்ள கார்களுக்கு FASTag Annual Pass வசதி உள்ளது. ஆனால், இந்த Annual Pass அனைத்து toll-களுக்கும் பொருந்தும் என்று கருதக்கூடாது.

பார்க்கிங் செலவு

நகர்புறங்களில் கார் வைத்திருப்பவர்களுக்கு இது பெரிய மறைமுகச் செலவாக இருக்கலாம். குறிப்பாக Apartment parking, அலுவலகம், Mall, ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற இடங்களில் கார் நிறுத்தும்போது கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அடிக்கடி வெளியே செல்லும் பழக்கம் இருந்தால், இந்தச் செலவும் காலப்போக்கில் கணிசமாக சேரலாம்.

1011
Car Wash & Cleaning செலவு

காரை சுத்தமாகவும் நல்ல நிலையில் வைத்திருக்க Exterior wash, interior cleaning, vacuum cleaning, dashboard மற்றும் seat cleaning போன்றவற்றுக்கு அவ்வப்போது பணம் செலவாகும்.

கார் பிரியர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது

காரை அதிகமாக ஓட்டுபவர்களுக்கு எரிபொருள், டயர், சர்வீஸ் மற்றும் பழுதுபார்ப்பு செலவுகள் முக்கியமாக இருக்கும். குறைவாக ஓட்டுபவர்களுக்கு இன்சூரன்ஸ், பார்க்கிங், பேட்டரி மற்றும் பராமரிப்பு செலவுகள் கவனிக்க வேண்டியவையாக இருக்கும். எனவே, எல்லா கார்களுக்கும் ஒரே maintenance செலவு இருக்காது.

கார் விலை குறைவாக இருந்தாலும், அதற்கான செலவு எப்போதும் குறைவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. குறைவான மைலேஜ், அதிக விலை கொண்ட டயர்கள் அல்லது உதிரிபாகங்கள் இருந்தால், எரிபொருள் மற்றும் பராமரிப்புக்கான செலவு அதிகரிக்கலாம். இதனால் நீண்ட காலத்தில் அந்தக் காரின் மொத்த உரிமைச் செலவு (Ownership Cost) அதிகமாகலாம்.

1111
முக்கியமாக நினைவில் வைக்க வேண்டியது

காரை வாங்குவது ஒரு செலவு, அதை பராமரித்து ஓட்டுவது மற்றொரு முக்கியமான செலவு. எனவே, புதிய கார் வாங்கும்போது On-road price-ஐ மட்டும் பார்க்காமல், அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய எரிபொருள், இன்சூரன்ஸ், சர்வீஸ், டயர், பேட்டரி, பார்க்கிங், டோல், EMI மற்றும் பழுதுபார்ப்பு செலவுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பட்ஜெட் அமைப்பது நல்லது. இதன் மூலம் காரின் 5 ஆண்டு Total Cost of Ownership (TCO) எவ்வளவு இருக்கும் என்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.

Read more Photos on
click me!

Recommended Stories