Vegetable Price Today : தக்காளி, வெங்காயம் விலை குறைந்ததா.? கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை நிலவரம் என்ன.?

Published : Sep 19, 2023, 08:58 AM IST

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையானது மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் காய்கறிகளின் விலையானது கடந்த சில தினங்களாக மாற்றம் இன்றி ஒரே விலையில விற்பனையாகிறது.   

PREV
14
Vegetable Price Today : தக்காளி, வெங்காயம் விலை குறைந்ததா.? கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை நிலவரம் என்ன.?

காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம்  ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 89 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

24

பாகற்காய் விலை என்ன.?

குடைமிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய், சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய், பாகற்காய் ஒரு கிலோ 20 ரூபாய்,  அவரைக்காய் ஒரு கிலோ 75 ரூபாய், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

34
Vegetables

கத்திரிக்காய் விலை என்ன

முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பச்சை கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

44
Vegetable

இஞ்சி, தக்காளி விலை என்ன.?

இஞ்சி விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இஞ்சியின் தரத்தை பொறுத்து விற்பனை செய்யும் விலையானது மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் ஈரமாக உள்ள இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாயிலிருந்து விற்பனையாகிறது. அதிகபட்சமாக 240 முதல் 250 ரூபாய் வரை இஞ்சி விற்பனை செய்யப்படுகிறதுந.  தக்காளி விலையானது கடந்த சில தினங்களாக குறைந்துள்ளது. அந்த வகையில்  ஒரு கிலோ தக்காளி 16 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதையும் படியுங்கள்

சென்னை மாநகராட்சியில் தொடர் இழப்பை சந்திக்கும் ஆளுங்கட்சி.. திமுக பெண் கவுன்சிலர் மாரடைப்பால் மரணம்.!

click me!

Recommended Stories