தக்காளி, வெங்காயம், இஞ்சி விலை என்ன.? கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலையில் மாற்றமா.?

First Published | Nov 20, 2023, 6:45 AM IST

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக காய்கறி மொத்த சந்தையான கோயம்பேட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் வழக்கம் போல் காய்கறிகளின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இன்று வின்பனை செய்யப்படுகிறது. 
 

தக்காளி, வெங்காயம் விலை என்ன.?

சென்னை கோயம்பேட்டில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும்,  சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,  உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,  நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

vegetables

அவரைக்காய் விலை என்ன.?

குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Latest Videos


கத்திரிக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
 

வெண்டைக்காய் விலை என்ன.?

பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையும், மாங்காய் ஒரு கிலோ 85 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி 25 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

13 மாவட்டங்களில் கனமழை அடிச்சு ஊத்தப்போகுது… வானிலை மையம் அலெர்ட்.. எங்கெல்லாம் தெரியுமா?

click me!