TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?

Published : May 16, 2026, 05:22 PM ISTUpdated : May 16, 2026, 05:44 PM IST

TVK Cabinet: பி. வெங்கடராமன் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராகியுள்ளார். இவருக்கு கல்வித்துறை ஒதுக்க கூடாது என்று பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
14
தவெக அரசு அமைச்சரவை பட்டியல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட நடிகர் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய சாதனை படைத்தது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், திமுக கூட்டணி கட்சிகளான விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உதவியுடன் தவெக ஆட்சி அமைந்துள்ளது. விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா உள்பட 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

24
முதல்வர் விஜய்க்கு என்ன பொறுப்பு?

தவெக ஆட்சி அமைத்து பல நாட்களாகியும் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. இந்த நிலையில், தவெக அமைச்சரவை பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீட்டை ஆளுநர் அங்கீகரித்துள்ளார். தமிழக முதல்வர் விஜய்க்கு பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), காவல்துறை, உள்துறை, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் மகளிர் நலன் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

34
நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா பொதுப்பணித்துறை

என்.ஆனந்த் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஆகிய துறைகளை கவனிப்பார். ஆதவ் அர்ஜுனா பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகியுள்ளார். அவர் பொதுப்பணி (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) மற்றும் விளையாட்டு மேம்பாடு துறைகளை கவனிப்பார். டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் சுகாதாரத்துறை அமைச்சர் ஆனார். மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கபப்ட்டுள்ளது. அவர் நிதித்துறை அமைச்சர் ஆகியுள்ளார்.

பி. வெங்கடராமனுக்கு என்ன துறை

பி. வெங்கடராமன் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராகியுள்ளார். இவருக்கு கல்வித்துறை ஒதுக்க கூடாது என்று பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தது குறிப்பிடத்தக்கது. சி.டி.ஆர் நிர்மல்குமாருக்கு மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய துறைகளை இவர் கவனிப்பார்.

44
பள்ளிக்கல்விதுறை அமைச்சர் ராஜ்மோகன்

ராஜ்மோகன் பள்ளிக்கல்வி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ஆகியுள்ளார். அவர் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம் மற்றும் திரைப்படத் தொழில்நுட்ப பணிகளை கவனிப்பார். மேலும் டாக்டர் டி.கே. பிரபு இயற்கை வளத்துறை அமைச்சராகவும், ஒரெ பெண் அமைச்சரான கீர்த்தனாவுக்கு மிக முக்கியத்துவம் வாயந்த தொழில்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories