School Holiday : இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

Published : Oct 26, 2026, 06:39 AM IST

School Holiday : தமிழகத்தில் கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இன்று அக்டோபர் 26 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான முழு விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
14
பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

24
புயல் எச்சரிக்கை

மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று இன்று (அக்டோபர் 26 ஆம் ) தேதி புயலாகவும், அதனைத் தொடர்ந்து தீவிரப் புயலாகவும் உருவெடுக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

34
மழை வாய்ப்பு

இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன், மணிக்கு 40 -50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

44
பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை - பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை மற்றும் கனமழை எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் - பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக இன்று அக்டோபர் 26-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் - பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மற்றும் நீலகிரி

ராமநாதபுரம் மாவடத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் குன்னூர், உதகை, கோத்தகிரி, குந்தா ஆகிய 4 தாலுக்காவிற்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories