Tiruvannamalai Deepam : திருவண்ணாமலை மகா தீபம் நேரம், உள்ளூர் விடுமுறை, சிறப்புப் பேருந்துகள் - முழு விவரம்!

Published : Nov 20, 2026, 02:01 PM IST

Tiruvannamalai Deepam: திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நவம்பர் 24ஆம் தேதி நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும். உள்ளூர் விடுமுறை, இலவச தரிசன டிக்கெட், சிறப்புப் பேருந்துகள் உள்ளிட்ட முழு விவரங்கள்.

PREV
16
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

சிவபெருமானே மலையாகக் காட்சி தரும் புண்ணிய பூமி திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் என்று போற்றப்படும் அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா, உலகம் முழுவதும் உள்ள சிவ பக்தர்களுக்கு மிக முக்கியமான ஆன்மிக நிகழ்வாகும்.

அந்த வகையில், இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வரும் நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. அதிகாலை கோயிலில் பரணி தீபமும், மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன.

லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

உள்ளூர் விடுமுறை, இலவச ஆன்லைன் தரிசன அனுமதிச் சீட்டு, சிறப்புப் பேருந்துகள், மலை ஏறுவதற்கான கட்டுப்பாடுகள் என பக்தர்கள் முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அந்த அறிவிப்புகள் என்னென்ன? திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்கள் கவனிக்க வேண்டிய முழு விவரங்களைப் பார்க்கலாம்.

26
கார்த்திகை தீபம் 2026

இந்த ஆண்டு திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு நவம்பர் 24ஆம் தேதி நடைபெறுகிறது.

தேதி: நவம்பர் 24, 2026 - செவ்வாய்க்கிழமை

பரணி தீபம்: அதிகாலை 4 மணி

மகா தீபம்: மாலை 6 மணி

இந்த ஆண்டு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

பரணி தீபம் மற்றும் மகா தீபம் - சிறப்புகள் என்ன?

பரணி தீபம்

கார்த்திகை தீபத் திருநாளன்று அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பாகப் பரணி தீபம் ஏற்றப்படும். ஒரே சுடரில் இருந்து ஐந்து தீபங்கள் ஏற்றப்படுவது இதன் தனிச்சிறப்பாகும். இறைவன் ஒருவனே பல வடிவங்களில் காட்சி தருகிறான் என்ற தத்துவத்தை இது உணர்த்துவதாக நம்பப்படுகிறது.

மகா தீபம்

அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காகப் பெரிய கொப்பரையில் நெய் மற்றும் திரி பயன்படுத்தப்படும்.

சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லாத ஜோதிப் பிழம்பாகத் தோன்றியதை நினைவுகூரும் வகையில் இந்தத் தீபம் ஏற்றப்படுகிறது. மலையின் உச்சியில் ஏற்றப்படும் ஜோதி பல கிலோமீட்டர் தொலைவிலிருந்தும் பக்தர்களுக்குக் காட்சி தரும்.

மகா தீபம் ஏற்றப்படும் நேரத்தில் கோயிலில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருள்வதும் திருவிழாவின் முக்கியமான நிகழ்வாகும்.

36
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 24ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறையை ஈடுசெய்யும் பணி நாள்: டிசம்பர் 5, சனிக்கிழமை.

பரணி தீபம், மகா தீபம் தரிசனத்திற்கு 3,000 இலவச அனுமதிச் சீட்டுகள்

இந்த ஆண்டு பக்தர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பாக, பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை கோயிலுக்குள் இருந்து தரிசிப்பதற்கான கட்டண நுழைவுச் சீட்டு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக மொத்தம் 3,000 இலவச அனுமதிச் சீட்டுகள் இணையதளம் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனுமதிச் சீட்டு ஒதுக்கீடு

தரிசனம் - உள்ளூர் பக்தர்கள் - வெளியூர் பக்தர்கள்

பரணி தீபம்: 500 - 500

மகா தீபம்: 1,000 - 1,000

மொத்தம்: 1,500 - 1,500

முன்பதிவு தொடக்கம்: நவம்பர் 18, காலை 11 மணி.

முன்பதிவு முடிவு: நவம்பர் 20, மாலை 3 மணி.

பயனாளிகள் தேர்வு: நவம்பர் 20, மாலை 4 மணி.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும்.

46
சிறப்புப் பேருந்துகள் - எங்கிருந்து இயக்கப்படுகின்றன?

சிறப்புப் பேருந்துகள் 

கார்த்திகை தீபத் திருவிழாவின்போது திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், போக்குவரத்துத் துறை சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, விழுப்புரம், வேலூர், சேலம், காஞ்சிபுரம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தென் மாவட்ட பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டம் சார்பில் 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்துகள் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன.

வாகன நிறுத்த ஏற்பாடுகள்

  • 25 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
  • 155 இடங்களில் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • பக்தர்கள் தங்களது வாகனங்களை நகருக்குள் எடுத்துச் சென்று நெரிசலை ஏற்படுத்தாமல், ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடங்களைப் பயன்படுத்த வேண்டும்.
56
பக்தர்களுக்கு என்னென்ன கட்டணமில்லா வசதிகள்?

கட்டணமில்லா வசதிகள்?

கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சில முக்கியமான கட்டணமில்லா வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • நவம்பர் 12 முதல் நவம்பர் 28 வரை திருவண்ணாமலை நகருக்குள் வரும் வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • 14 கி.மீ. கிரிவலப் பாதையில் உள்ள பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்குக் கட்டணம் வசூலிக்கப்படாது.
  • பக்தர்களுக்காக குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
  • கிரிவலப் பாதையில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன.
  • அவசர உதவி மற்றும் காவல்துறை உதவி மையங்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


பக்தர்களுக்கு உதவி எண்கள்

தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

04175 - 233344

04175 - 233345

8072797683

66
ஏன் மலை ஏறத் தடை?

அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவதை நேரில் காண வேண்டும் என்ற ஆசை பல பக்தர்களுக்கும் இருக்கும். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் இந்த ஆண்டு பக்தர்கள் மலை ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஃபெஞ்சல் புயல் காரணமாகப் பெய்த கனமழையின்போது அண்ணாமலையார் மலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து மலையேற்றத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருப்பதாலும், மழைக்காலத்தில் மண் சரிவு உள்ளிட்ட இயற்கை ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாலும் இந்த ஆண்டு தீபத் திருவிழாவின்போதும் தடை தொடர்கிறது.

யாருக்கு அனுமதி?

  • பொதுப் பக்தர்களுக்கு மலை ஏற அனுமதி கிடையாது.
  • தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடும் உரிய அதிகாரப்பூர்வ நபர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
  • தடையை மீறி மலை ஏற முயற்சிப்பவர்கள் மீது வனச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பர்வதமலைக்கும் தீப நாளில் பக்தர்கள் ஏறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


மலையேற்றத்தைத் தடுக்க வனத்துறையினர் 120 பேர் மற்றும் 250 தன்னார்வலர்கள் 28 இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் நான்கு சோதனைச் சாவடிகளும் அமைக்கப்படுகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories