திடீரென உயர்ந்த தக்காளி விலை.. கோயம்பேடு சந்தையில் வெண்டைக்காய், முருங்கைக்காய் விலை என்ன தெரியுமா.?

First Published Jan 2, 2024, 8:12 AM IST

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை கோயம்பேடுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில், தக்காளி, வெண்டை, முருங்கைக்காய் விலையானது சற்று அதிகரித்துள்ளது.
 

vegetables

தக்காளி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 26 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

vegetables

வெண்டைக்காய் விலை என்ன.?

பீன்ஸ் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி உள்ள 50 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Latest Videos


முட்டைக்கோஸ் விலை என்ன.?

குடைமிளகாய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் 65 ரூபாய்க்கும், அவரைக்காய் 70 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ  35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

முருங்கைக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,  கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,  வெள்ளரிக்காய் ஒரு கிலோ 12 ரூபாய்க்கும்,  முருங்கைக்காய் ஒரு கிலோ 130 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்

கருணாநிதி வாழ்க்கையை கவிதையாக எழுதுங்கள்... வைரமுத்துவிடம் அன்பு கட்டளையிட்ட ஸ்டாலின்

click me!