தமிழகத்தில் அதிகரித்து வந்த வெப்பத்தின் மத்தியில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் மீண்டும் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. மதியம் நேரங்களில் சாலைகளில் நடப்பதே சிரமமாக இருக்கும் அளவுக்கு வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் கோடை காலம் துவங்கிவிட்டதோ என்ற எண்ணம் பொதுமக்களிடம் உருவானது. ஆனால், இந்த வெப்பத்துக்கு இடையே மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
25
வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும் என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
35
தென் தமிழகத்தில் இன்று கனமழை வாய்ப்பு
இந்த மாற்றத்தின் தாக்கமாக இன்று தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை தீவிரமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையற்ற வெளிச்செலவை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 25ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை தொடரக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. வெப்பம் அதிகரித்திருந்த பகுதிகளில் இந்த மழை சற்றே நிம்மதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
55
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
அதே நேரத்தில், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கடுமையான அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.