TN Govt Paternity Leave: அரசு ஆண் ஊழியர்களுக்கு குட் நியூஸ்: தமிழ்நாட்டில் முதன்முறையாக தந்தையர் மகப்பேறுகால விடுப்பு; எப்போது முதல் எடுக்கலாம்?

Published : Nov 26, 2026, 03:58 PM IST

தமிழ்நாடு அரசில் பணியாற்றும் திருமணமான ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்போ அல்லது பிறந்த 6 மாதங்களுக்குள்ளோ இவ்விடுப்பைப் பெறலாம்.

PREV
13
அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் திருமணமான ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) அளித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை (நவம்பர் 26, 2026) வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு (Maternity Leave) வழங்கப்பட்டு வரும் நிலையில், அரசு ஆண் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கப் பரிசீலிக்க வேண்டுமென்ற கோரிக்கை அரசுப் பணியாளர்களிடமிருந்து அரசுக்கு வரப்பெற்றுள்ளது.

23
தந்தையின் பங்களிப்பு

குழந்தை பிறக்கும் காலகட்டம் என்பது தாய் மற்றும் குழந்தைக்கு மிகவும் முக்கியமானதாகும். இக்காலகட்டத்தில் தாய்க்கு உடல் மற்றும் மனரீதியான ஆதரவு வழங்குவதுடன், குழந்தை பராமரிப்பிலும் தந்தையின் பங்களிப்பு அவசியமாகிறது. பெண் அரசுப் பணியாளர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது தாய்மை & குழந்தை நலனுக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அதேபோன்று, ஆண் அரசுப் பணியாளர்களுக்கும் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கப்படுவது குடும்பப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும், குழந்தை வளர்ப்பில் தந்தையின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் பெரிதும் உதவும்.

33
15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு!

எனவே, தமிழ்நாடு அரசு இக்கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, திருமணமான ஆண் அரசுப் பணியாளர்களுக்கு, அவர்தம் மனைவியின் மகப்பேறு காலத்தில் உடனிருக்க ஏதுவாக 15 நாட்கள் ‘தந்தையர் மகப்பேறுகால விடுப்பு’ (Paternity Leave) வழங்கியும், அவ்விடுப்பினை குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ (அ) குழந்தை பிறந்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள்ளாகவோ பயன்படுத்திக் கொள்ளவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories