ஆதார் என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. நாட்டில் நடைபெறும் பல்வேறு மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இப்போது ரேஷன் கார்டுடன் ஆதார் அணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.