மே 15ம் தேதி வரை தான் அவகாசம்! அதுக்குள்ள மாறணும்! திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Published : Apr 03, 2025, 06:21 PM ISTUpdated : Apr 03, 2025, 06:33 PM IST

திருவண்ணாமலையில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தமிழ் பெயர் பலகை கட்டாயம். மே 15க்குள் வைக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

PREV
15
மே 15ம் தேதி வரை தான் அவகாசம்! அதுக்குள்ள மாறணும்! திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்

உலகபுகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆந்திரா, தெலங்கானாவில் அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இதனால், அருணாசலேஸ்வரர் திருக்கோயில், முடி காணிக்கை செலுத்துமிடம் உள்ளிட்ட பல இடங்களில் தெலுங்கு மொழியில் தகவல் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் என திரும்பிய பக்கமெல்லாமல், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளின் தகவல்கள் பலகைகள் காணப்படுகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

25

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள் 1948ல் விதி 15ன்படி பெயர் பலகை தமிழில் வைக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவு நிறுவனங்களும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் விதிகள் 1959ல் விதி 42(B)ன் படி பெயர் பலகை தமிழில் வைக்கப்பட வேண்டும். 

இதையும் படிங்க: வானிலை: இன்றும் நாளையும் 17 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பிச்சு உதற போகுதாம்!

 

35

பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும்

தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் விதிகள் 1950 113ன் படி அனைத்து தொழிற்சாலைகளிலும் தமிழில் பெயர் பலகை வைக்கப்படவேண்டும் என்ற விதிமுறைகளுக்கு உட்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் பெயர் பலகைகளை தமிழில் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பெயர் பலகையில் கடை நிறுவனத்தில் பெயரினை பெரிய அளவிலான தமிழ் எழுத்துக்களிலும் பிறகு ஆங்கிலம் மற்றும் பிற மொழியில் குறிப்பிடப்படும் கடை நிறுவனத்தின் பெயரினை தமிழ் எழுத்துக்களை விட சிறிய அளவிலான எழுத்துக்களிலும் பெயர் பலகையில் குறிப்பிடப்பட வேண்டும்.

45

மே 15ம் தேதி வரை தான் அவகாசம்

இக்குழுவினர் மூலம் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உணவு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் தமிழில் பவர் பலகை வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி மே 15க்குள் 100 சதவீதம் தமிழ் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா என்பதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மேலும் மே 15-க்குள் தமிழ் பெயர் பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

இதையும் படிங்க:  என்னது! நாளைக்கு இவ்வளவு இடங்களில் மின்தடையா? வெளியான லிஸ்ட்!

55

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

எனவே திருவண்ணாலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பிரதிநிதிகள் உணவு நிறுவனங்களின் சங்க பிரதிநிதிகள் மற்றும் வேலையளிப்பவர் தரப்பு பிரதிநிதிகள் ஆகியோர் தங்கள் உறுப்பினர்களுக்கு இந்த தகவலை தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தமிழ் பெயர் பலகை 100 சதவீதம் அமைக்கப்படுவதை உறுதி செய்வதுடன் அபராதத்தை தவிர்க்கவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்துள்ளார்

Read more Photos on
click me!

Recommended Stories