ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை

Published : Dec 11, 2025, 11:59 AM IST

இந்த நடவடிக்கைகள், இது தமிழக கலாச்சாரத்தின் மீதான மரியாதையா அல்லது 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பாஜகவின் அரசியல் வியூகமா என்ற விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
12
பாரதியாருக்கு பிரதமர் மோடி மரியாதை

தமிழகத்தின் இரு மாபெரும் வரலாற்று நாயகர்களுக்கும் தொடர்ந்து இரு நாட்களில் அஞ்சலி செலுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் பகிர்ந்த சமூக ஊடகப் பதிவுகள் அரசியல் வட்டாரங்களில் புதிய புயலை எழுப்பியுள்ளது. நேற்று ராஜாஜி… இன்று பாரதி… தமிழர்களுக்கான பிரதமரின் மரியாதை வெளிப்பாடுகள் இந்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (டிசம்பர் 11) மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 144வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது X பக்கத்தில் தமிழில் பகிர்ந்த பதிவில், “பாரதிக்கு என் மரியாதை. அவரது கவிதைகள் ஒரு தலைமுறையை எழுப்பின; அவரது சிந்தனைகள் எண்ணற்ற மனங்களில் உள்நோக்கத்தை உருவாக்கின. இந்தியாவின் பண்பாட்டு ஒற்றுமையையும் தேசிய உணர்வையும் அவர் தனது எழுத்தின் ஒளியால் இளகச் செய்தார். அனைவரையும் சமமாகக் கருதும் ஒரு நீதிசார் சமூகத்தை உருவாக்க அவர் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். தமிழ் இலக்கியத்திற்கு அவர் கொடுத்த செல்வம் அளவிட முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார்.

22
ராஜாஜிக்கு மரியாதை செய்த மோடி

இதற்கு முன்பு, நேற்று (டிசம்பர் 10) ராஜாஜி பிறந்த நாளை முன்னிட்டு மோடி பகிர்ந்த அஞ்சலி பதிவு பெரும் கவனம் பெற்றது. “சுதந்திரப் போராட்ட வீரர், ஆழமான சிந்தனையாளர், அரசியல் மேதை… இத்தகைய பெருமைக்குரிய வர்ணனைகள் அனைத்தும் ராஜாஜியை நினைக்கும் போது மனதில் வரும். தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு நன்றி செலுத்துகிறோம்” என்று மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழக தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதும், காசி தமிழ் சங்கமம் போன்றவற்றை தொடங்கி வைப்பதும் 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பாஜக செயல்படுகிறதா என்ற ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் வரலாற்றின் இரண்டு முக்கிய நபர்களுக்கு இரண்டு நாட்களில் அஞ்சலி செலுத்தியுள்ளார் பிரதமர் மோடி. இதை அரசியல் ஆலோசகர்ர்கள், “தமிழக கலாச்சார மரபை தேசிய மேடையில் மீண்டும் உயர்த்தும் முயற்சியா? அல்லது தேர்தலில் வாக்கு வாங்கும் முயற்சியா?” என கேள்வி எழுப்புகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories