Missing Bag on Train: டிரெயின்லேயே பேக்கை மறந்துட்டீங்களா? பதற்றப்படாதீங்க..139-க்கு உடனே கால் பண்ணுங்க!

Published : Sep 30, 2026, 10:57 AM IST

Missing Bag on Train: ரயிலில் பேக் அல்லது முக்கிய பொருளை மறந்துவிட்டீர்களா? பதற்றப்பட வேண்டாம். 139 உதவி எண்ணிலும் RailMadad தளத்திலும் உடனடியாக புகார் அளிக்கலாம். ரயில் எண், PNR, கோச், சீட் விவரங்களுடன் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

PREV
17
டிரெயின்லேயே பேக்கை மறந்துட்டீங்களா?

ரயிலில் பயணம் செய்பவர்கள் ரயிலில் இருந்து அவசரமாக இறங்கும்போது அல்லது கவனக்குறைவால் நமது உடமைகள் மற்றும் பைகளை ரயிலிலேயே விட்டுவிட்டு வருவது பலருக்கும் நடக்கும் ஒரு விஷயம் தான்.

குறிப்பாக, தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக ரயிலில் இருந்து இறங்கிய சில நொடிகளில் ரயில் புறப்பட்டுச் சென்ற அனுபவம் பல பயணிகளுக்கும் எதிர்பாராத பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

லக்கேஜ், மொபைல், லேப்டாப், ஆவணங்கள் என முக்கியமான பொருளை ரயிலிலேயே விட்டுவிட்டால், உடனே ரயில்வேயிடம் தகவல் தெரிவிப்பது மிகவும் முக்கியம். இதற்காக நாம் பதற்றபட தேவையில்லை. இந்திய ரயில்வே இதற்காகச் சிறப்பு நடைமுறைகளையும், வசதிகளையும் அமைத்துள்ளது.

பேக் கிடைக்குமா? ரயில்வே என்ன நடவடிக்கை எடுக்கும்? எங்கே புகார் கொடுக்க வேண்டும்? 139 என்றால் என்ன? RailMadad செயலியை எப்படி பயன்படுத்துவது? போன்ற முழு விவரங்களையும் விரிவாக பார்க்கலாம்.

27
உடனடியாக என்ன செய்ய வேண்டும்?

ரயிலிலிருந்து இறங்கியவுடன் பேக் காணவில்லை அல்லது ரயிலிலேயே விட்டுவிட்டது தெரியவந்தால், ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் முன்பே உடனடியாக 139 என்ற இந்திய ரயில்வே உதவி எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம். RailMadad இணையதளம் மூலமாகவும் புகார் அளிக்க முடியும்.

புகார் கொடுக்கும்போது முடிந்தவரை இந்த விவரங்களைத் தயாராக வைத்திருங்கள்:

  • ரயில் எண்
  • PNR எண்
  • பயணித்த தேதி
  • ஏறிய நிலையம்
  • இறங்கிய நிலையம்
  • கோச் எண்
  • சீட்/பெர்த் எண்
  • பையின் நிறம், அளவு, அடையாளம்
  • பேக்கிற்குள் இருந்த முக்கிய பொருட்கள்
  • மொபைல் எண்
37
RailMadad என்றால் என்ன?

RailMadad என்பது இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ புகார் மற்றும் உதவி சேவை தளம் ஆகும். ரயில் பயணத்தின் போது அல்லது ரயில் நிலையத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதில் புகார் அளிக்கலாம்.

புகார் பதிவு செய்ததும் Reference Number வழங்கப்படும். அதை பயன்படுத்தி, உங்கள் புகாரின் நிலை மற்றும் நடவடிக்கை விவரங்களை தொடர்ந்து கண்காணிக்கலாம்.

RailMadad-ல் புகார் பதிவு செய்யும்போது, Train Complaint, Lost / Missing Goods என்பதைத் தேர்ந்தெடுத்து, PNR எண், ரயில் எண், கோச் மற்றும் பெர்த் எண் போன்ற பயண விவரங்களை உள்ளிட வேண்டும். பிரச்சினையை தெளிவாகக் குறிப்பிடுவதுடன், தேவையெனில் புகைப்படம் அல்லது தொடர்புடைய ஆவணங்களையும் புகாருடன் பதிவேற்றலாம்

47
ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்

அதேபோல், அருகில் உள்ள ரயில்வே காவல் நிலையம் (GRP) அல்லது ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் (RPF) எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்க வேண்டும். அதில் உங்கள் பிஎன்ஆர் (PNR) எண், ரயில் எண், பெட்டி எண் மற்றும் தவறவிட்ட பொருளின் விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.

அவர்கள் உடனே அடுத்து ரயில் நிற்கும் நிலையத்திற்கு (Next Stopping Station) செய்தி அனுப்பி, அந்த பெட்டியை சோதனை செய்ய ஏற்பாடு செய்வார்கள்.

57
ஆபரேஷன் அமானத் (Operation Amanat)

இந்திய இரயில்வே (Indian Railways) பயணிகளின் தவறவிட்ட பொருட்களைப் பத்திரமாக மீட்டுத் தருவதற்காக 'ஆபரேஷன் அமானத்' (Operation Amanat) என்ற சிறப்பான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரயில்களில் மீட்கப்படும் உடமைகள் பாதுகாக்க்கப்படுகிறது.

இதில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) ரயில்களில் கண்டெடுக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் புகைப்படம் எடுத்து, அவற்றின் விவரங்களை மண்டல வாரியாக அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பதிவேற்றம் செய்கிறார்கள்.

நீங்கள் பயணம் செய்த ரயில் எந்த ரயில்வே மண்டலத்தைச் சேர்ந்ததோ, அந்த RPF இணையதளத்திற்குச் சென்று அங்குப் பதிவேற்றப்பட்டிருக்கும் புகைப்படங்களை வைத்து உங்களது பேக் இருக்கிறதா என்பதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.

67
பையை எவ்வாறு திரும்பப் பெறுவது?
  • உங்களது பொருள் அடையாளம் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட ரயில் நிலைய RPF அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.
  • அங்கு சென்றதும், அந்தப் பொருள் உங்களுக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். பொருளின் பில், அடையாள அட்டை அல்லது ரயில் பயண டிக்கெட் போன்ற ஆவணங்களை காண்பித்து, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி உங்கள் பொருட்களைப் பத்திரமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
  • பைக்குள் என்னென்ன பொருட்கள் இருந்தன (துணிகள், ஆவணங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் ) என்பதை சரியாகக் கூற வேண்டும்.
  • RPF அதிகாரிகள் உங்கள் தகவல்களைச் சரிபார்த்து, ரசீது ஒன்றில் கையொப்பம் பெற்றுக் கொண்டு பையை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.
77
முக்கியமான அவசர உதவி எண்கள்
  • ரயில்வே உதவி எண் - 139 (24x7 செயல்படும் - தமிழ் மொழியிலும் பேசலாம்)
  • RPF அவசர பாதுகாப்பு எண் - 139 (பாதுகாப்பு மற்றும் உதவிக்கு)
  • காவல் துறை (GRP) - 1512 (ரயில்வே காவல்துறை உதவி எண்)
  • புகார் செயலி - RailMadad App (Android & iOS)

பை நமக்கு கிடைக்குமா?

நிச்சயமாகக் கிடைக்க 90 சதவீதத்திற்கும் மேல் வாய்ப்புள்ளது. தவறவிட்ட பையை மற்ற பயணிகள் யாரேனும் தவறான எண்ணத்தில் எடுக்காத வரை, அது RPF அல்லது ரயில்வே ஊழியர்கள் கைகளில் தான் கிடைக்கும்.

நீங்கள் எவ்வளவு விரைவாக 139 அல்லது RailMadad மூலம் புகார் அளிக்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக உங்கள் பை உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories