Madurai Veeramani: மதுரை வீரமணிக்கு ஸ்வீட் பாக்ஸ் கிடைச்சிருச்சு.. ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் கொடுத்த சர்ப்ரைஸ்!

Published : Oct 17, 2026, 08:48 PM IST

Madurai Veeramani : தீபாவளிக்கு ஸ்வீட் பாக்ஸ் கேட்டு வைரலான மதுரை வீரமணிக்கு, போலி கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்களால் பெரும் தொந்தரவு ஏற்பட்டது. இந்நிலையில், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் அவருக்கு ஸ்வீட் பாக்ஸ் உள்ளிட்ட பரிசுகளை வழங்கியுள்ளது.

PREV
16
மதுரை வீரமணிக்கு ஸ்வீட் பாக்ஸ் கிடைச்சிருச்சு

தீபாவளிக்கு ஒரு ஸ்வீட் பாக்ஸ் கிடைத்தால் போதும் என்று ஆசைப்பட்ட மதுரை வீரமணிக்கு, அடுத்தடுத்து வந்த ஆன்லைன் ஆர்டர்களால் தலைவலியே மிஞ்சியது. சமூக வலைதளங்களில் வைரலான இந்தச் சம்பவத்தின் நடுவே, ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் கொடுத்ததாகப் பகிரப்படும் சர்ப்ரைஸ் இப்போது கவனம் ஈர்த்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த சமூக வலைதளப் பிரபலம் வீரமணி, தனது நகைச்சுவையான வீடியோக்கள் மற்றும் மதுரை வட்டாரப் பேச்சு வழக்கால் ரசிகர்களைக் கவர்ந்தவர். தீபாவளி இனிப்புக்காக அவர் வைத்த கோரிக்கை எப்படி இவ்வளவு பெரிய வைரல் சம்பவமாக மாறியது? அவரது வாழ்க்கையில் நடந்த முக்கியத் திருப்பங்கள் என்ன? முழுமையாகப் பார்ப்போம்.

26
வீரமணியின் வைரல் கதை

 கேரளா ட்ரிப் முதல் தீபாவளி சர்ப்ரைஸ் வரை

ரசிகர்களிடம் வைத்த கோரிக்கை

மதுரையைச் சேர்ந்த வீரமணி, இன்ஸ்டாகிராமில் நகைச்சுவையான வீடியோக்கள் மூலம் கவனம் பெற்றவர். மதுரை வட்டாரப் பேச்சு வழக்கில் அவர் பேசும் விதமும், இயல்பான நகைச்சுவையும் அவருக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்தின.

இதற்கு முன்பு, தனது நீண்ட நாள் ஆசையான கேரளா பயணத்திற்காக அவர் சமூக வலைதளத்தில் உதவி கேட்டுள்ளார். அதற்கு அவர்து ரசிகர்கள் இணைந்து சுமார் ரூ.6,000 வழங்கியுள்ளனர். அந்தப் பணத்தின் மூலம் வீரமணி கேரளாவுக்குச் சென்று தனது பயண அனுபவங்களை வீடியோக்களாகப் பகிர்ந்தார்.

36
ஒரு ஸ்வீட் பாக்ஸ்

ஒரு ஸ்வீட் பாக்ஸ் கேட்டதால் வந்த சிக்கல்

தீபாவளி நெருங்கியதால், தனக்கு ஒரு ஸ்வீட் பாக்ஸ் வாங்கி அனுப்புமாறு வீரமணி சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்தார். அதற்காகத் தனது தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரியையும் பகிர்ந்தார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தது போல விஷயம் நடக்கவில்லை. சிலர் அவரது பெயரில் தொலைக்காட்சி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களைக் கேஷ் ஆன் டெலிவரி முறையில் ஆர்டர் செய்தனர். ஒரு தொலைக்காட்சியின் விலை மட்டும் சுமார் ரூ.1.69 லட்சம் என கூறப்படுகிறது.

தான் ஆர்டர் செய்யாத பொருட்களைப் பெறுவதற்காகத் தொடர்ந்து டெலிவரி ஊழியர்கள் வீட்டிற்கு வந்ததால், வீரமணி மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால், போலி ஆர்டர்களை நிறுத்துமாறு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து ஏற்பட்ட தொந்தரவால் அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.

46
இன்ஸ்டாமார்ட் சர்ப்ரைஸ்

கடைசியில் வந்த எதிர்பாராத சர்ப்ரைஸ்

இத்தனை பிரச்சினைகளுக்குப் பிறகு, வீரமணிக்கு ஒரு மகிழ்ச்சியான திருப்பம் கிடைத்துள்ளது.ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) அவருக்கு இலவசமாக ஸ்வீட் பாக்ஸ் மற்றும் பல பொருட்களை வழங்கியுள்ளது.

அந்தச் சர்ப்ரைஸில் இடம்பெற்றுள்ள பொருட்கள்

ஸ்வீட் பாக்ஸ்

ஸ்பீக்கர்

மானிட்டர்

அடுப்பு

மிக்ஸி

56
Quick India Movement

இந்தப் பரிசுகள், இன்ஸ்டாமார்ட்டின் Quick India Movement முயற்சியின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீரமணியின் வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவைப் பல லட்சம் பேர் பார்த்த நிலையில், இதுதான் உண்மையான கிளைமாக்ஸ், கடைசியில் ஸ்வீட் பாக்ஸும் கிடைத்துவிட்டது என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

66
விளம்பரமா, சர்ப்ரைஸா? இணையத்தில் எழுந்த விவாதம்

வீரமணியின் ஸ்வீட் பாக்ஸ் கோரிக்கையில் தொடங்கிய சம்பவம், போலி கேஷ் ஆன் டெலிவரி ஆர்டர்களால் பெரும் தொந்தரவாக மாறியது. ஆனால், இறுதியில் இன்ஸ்டாமார்ட் வழங்கிய பரிசுகள் கதைக்கு மகிழ்ச்சியான திருப்பத்தைக் கொடுத்துள்ளன.

ஒரு ஸ்வீட் பாக்ஸ் கேட்டு தொடங்கிய பயணம், வீட்டையே காலி செய்யும் அளவுக்குச் சிக்கலாகி, கடைசியில் பரிசுப் பொருட்களுடன் முடிந்திருப்பது இணையத்தில் பேசப்படும் வித்தியாசமான கதையாக மாறியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories