தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருட.ன் இணைந்து தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பொதுச்செயலாளர் உட்பட 9 உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆளுநரிடம் பெரும்பான்மைக்கான கடிதத்தை வழங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது.
23
முதல்வராக விஜய்..
தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்த 1.75 கோடி வாக்காளர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடும் வகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ரசிகர்கள், தொண்டர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் “C.ஜோசப் விஜய் எனும் நான்” என்று குறிப்பிட்டதும் அரங்கம் அதிரும் அளவிற்கு அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து ரகசிய காப்பு பிரமாணம் செய்து கொண்டு இறைவன் மீது ஆணையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
33
9 அமைச்சர்கள் பதவியேற்பு
விஜய்யைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமனன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.