குறைந்தது தக்காளி, வெங்காயத்தின் விலை.! கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

First Published | Dec 8, 2023, 8:22 AM IST

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், நேற்றைய விலையை விட இன்று வெங்காயம், தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. அதே நேரத்தில் கத்திரிக்காய், முருங்கைக்காய், கேரட் விலை அதிகரித்துள்ளது.

காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  சின்ன வெங்காயம் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 33 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

vegetables

பாகற்காய் விலை என்ன.?

நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 

Latest Videos


முருங்கைக்காய் விலை அதிகரிப்பு

முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உச்சத்தில் இஞ்சி விலை

இஞ்சியின் தரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றப்படுகிறது அந்த வகையில் ஒரு கிலோ இஞ்சி 150 முதல் 220 வரை விற்பனையாகிறது. வெண்டைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25க்கும், பீர்க்கங்காய் 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்

Chennai Floods: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு குட்நியூஸ்.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

click me!