உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயில் திருத்தேரோட்டத்தை ஒட்டி இன்று ஏப்ரல் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைப் பெருவிழா 18 நாட்கள் விமர்சையாக கொண்டாப்படுவது வழக்கம்.
23
School Holiday
அதன்படி நடப்பாண்டு சித்திரை பெருவிழா ஏப்ரல் 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் சாமி அலங்காரம் மற்றும் பல்லக்கில் சாமி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று காலை 7 மணிக்கு நான்கு ராஜவீதிகளில் திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
33
Thanjavur District Collector
இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் திருவிழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.