Published : Sep 05, 2026, 12:08 PM ISTUpdated : Sep 05, 2026, 12:11 PM IST
Bay Leaf in Phone Case : பிரியாணி இலை சமையலுக்கு மட்டுமல்ல, அதிர்ஷ்டத்தையும் தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உலகம் முழுவதும் பலர் தங்கள் போன் கவருக்குள் பிரியாணி இலையை வைக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர்.
பிரியாணி இலை சுவைக்கு மட்டுமல்ல, அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சக்தியையும் கொண்டது என நம்பப்படுகிறது. வெற்றி மற்றும் பண வரவுக்காக, உலகம் முழுவதும் பலர் தங்கள் போன் கவருக்குள் இந்த இலையை வைக்கின்றனர். மொபைல் போனில் வைப்பதற்குப் பின்னால் உள்ள நம்பிக்கைகள் என்னவென்று பார்ப்போம்.
பல்வேறு கலாச்சாரங்களில் பிரியாணி இலையை செழிப்பின் அடையாளமாகப் பார்க்கிறார்கள். போன் கவரில் இதை வைப்பதால், பண வரவு அதிகரித்து, லாபம் கிடைக்கும் என்பது பலரின் நம்பிக்கை. வாழ்க்கையில் நெக்ஸ்ட் லெவலுக்கு சென்றுவிடலாம் என்கிற நம்பிக்கையிலும் சிலர் இதை செய்கிறார்கள்.
பண்டைய கிரீஸ் மற்றும் ரோம் நாடுகளில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு இந்த இலையால் செய்யப்பட்ட கிரீடத்தை சூட்டுவார்கள். அன்று முதல் இது வெற்றியின் சின்னமாக விளங்குகிறது. உங்கள் புதிய வேலைகள் அல்லது ப்ராஜெக்ட்களில் வெற்றி கிடைக்க இது உதவும் எனச் சொல்லப்படுகிறது.
பிரியாணி இலை நம்மைச் சுற்றியுள்ள நெகட்டிவ் எனர்ஜியை (Negative Energies) விரட்டி, பாசிட்டிவ் வைப்ரேஷன்களை (Positive Vibrations) உருவாக்கும். போன் மூலம் வரும் அதிகப்படியான தகவல்களால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து, இது மன அமைதியைத் தரும் என்கிறார்கள். இந்த இலையை போனில் வைப்பதன் மூலம் ஸ்ட்ரெஸ் குறையும் என நம்புகிறார்கள்.
ஒரு நாளில் 24 மணி நேரமும் நாம் அதிகம் பயன்படுத்தும் பொருள் மொபைல் போன் தான். நமது தொடர்புகள், வியாபாரம், வேலை என அனைத்தும் போன் மூலமே நடப்பதால், அதிர்ஷ்டத்தின் சின்னமான இந்த இலையை போனுடன் வைத்திருப்பது நல்லது என்பது தற்போதைய நம்பிக்கை.
எப்போதும் சுத்தமான, காய்ந்த பிரியாணி இலையை பயன்படுத்துங்கள். அது போன் கவருக்குள் உடையாமல் கவனமாக வையுங்கள். இலையின் நிறம் மாறினாலோ அல்லது அது அதிகமாக காய்ந்துவிட்டாலோ, அதை மாற்றிவிட்டு புதிய இலையை வைத்துக் கொள்ளுங்கள். சிலர் இதனை அழகுக்காக போன் கவரில் வைத்துக் கொள்கிறார்கள். ஒருசிலரோ இதை போன் கவரில் வைப்பதால் நல்ல மனம் கிடைக்கும் அது ஒருவித பாசிடிவ் எனர்ஜியை கொடுப்பதாக சொல்கிறார்கள்.