மலைகள் மீது கோயில்கள் கட்ட இப்படி ஒரு காரணமா?

Published : May 30, 2025, 04:27 PM IST

பல தெய்வங்களுக்கு கோயில்கள் ஏன் உயர்ந்த மலைகளில் மட்டுமே இருக்கின்றன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

PREV
14

Why are Temples Built on High Mountains : இந்தியாவில் பல கோயில்கள் மலைமீதுதான் அமைந்திருக்கும். மலைக்கோயில்கள் இல்லாத மாவட்டங்கள் குறைவுதான். புனித யாத்திரைகள், வழிபாடுகள் எல்லாம் இந்தியாவில் அதிக நம்பிக்கைகளுடன் பார்க்கப்படக் கூடியவை.சில கோயில்கள் உயர்ந்த மலைகள், குன்றுகளில் தாம் இருக்கும். ஏன் கீழே அவற்றை கட்ட முடியாதா? மலைகளில் எதற்காக கட்டப்பட்டியுள்ளனர் என்பதை இங்கு காணலாம்.

24

மற்ற மத ஸ்தலங்களை விட இந்து மதத்தில் தான் மலைக்கோயில்கள் அதிகம். கேதார்நாத், பத்ரிநாத், வைஷ்ணோ தேவி, அமர்நாத், திருப்பதி, பழனி, சபரிமலை ஐயப்பன் என மக்கள் படையெடுக்கும் பல கோவில்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலும் பல பிரசித்தி பெற்ற கோயில்கள் ஏன் மலைகளில் உள்ளன; இதற்கு பின் வெறும் ஆன்மீக காரணங்கள் இல்லை. அறிவியல் காரணங்களும் உள்ளன.

34

பஞ்சபூதம்;

வேதங்கள், புராணங்களின்படி, பஞ்ச பூதங்களிடம் இருந்து இந்த பிரபஞ்சம் உருவானதாக சொல்லப்படுகிறது. நீர், காற்று, நெருப்பு, பூமி, வானம் அனைத்திலும் கடவுள்கள் வீற்றிருக்கிறார்கள். இதில் பூமியின் மகுடமாக மலைகள் உள்ளன. இந்த மகுடத்தை கடவுள்களுக்கு சூட்டும்விதமாக புனிதத் தலங்களும், கோயில்களும் மலைகளில் கட்டப்பட்டுள்ளன.

44

மலைகளின் வடிவமைப்பு:

மலைகள் சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்கும். மலைகளில் உள்ள கோயில்களில் அமர்ந்தால் மன அமைதியைத் தரக் கூடியது. எவ்வளவு மனக்கஷ்டம் இருந்தாலும் மலையேறி சென்று தெய்வ தரிசனம் செய்தால் மனம் இலகுவாகும். அப்படிப்பட்ட சூழலில் உள்ள நேர்மறை ஆற்றலை உடலுக்குள் பரவச் செய்யும் வடிவமைப்பு மலைகளுடையது. பூமியில் அரண் போல காணப்படும் மலைகளில் தெய்வங்களுக்கு கோயில் கட்டுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories