எந்த முருகப் பெருமானிடம் என்ன வேண்டுதல் வைக்க வேண்டும்?

Published : Jun 08, 2025, 10:22 PM IST

Vaikashi Visakam 2025 : வைகாசி விசாகம் நாளை கொண்டாடப்படும் நிலையில் எந்த முருகப் பெருமானிடம் என்ன வேண்டுதல் வைக்க வேண்டும்? யாரிடம் வேண்டுதல் வைத்தால் உடனே நிறைவேறும் தெரியுமா?

PREV
18
முருகப் பெரூமான் வைகாசி விசாகம்

Vaikashi Visakam 2025 : முருகப் பெருமான் அவதரித்த நாள் தான் வைகாசி விசாகம். முருகனுக்கான நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. விசாகம் 6 நட்சத்திரங்கள் ஒன்றாக கூடியது என்றும், இதன் காரணமாக முருகப் பெருமான் 6 முகங்களுடன் தோன்றினார் என்றும் கூறப்படுகிறது. இந்த நாள் ஜோதி நாள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும் முருகப் பெருமானை வழிபாடு செய்வார்கள்.

28
வைகாசி விசாகம்

இந்த நாளில் முருகப் பெருமானுக்கு விரதமிருந்து வழிபாடு செய்ய ஏராளமான நன்மைகள் கிடைக்கப் பெறும். அப்படிப்படி இந்த நாளில் எந்த முருகனுக்கு விரதமிருந்து வேண்டுதல் வைத்தால் என்ன பலன் உண்டாகும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

38
சண்முகர், பாலமுருகன், தண்டாயுதபாணி

பொதுவாக முருகப் பெருமானை சண்முகர், பாலமுருகன், தண்டாயுதபாணி, சுப்பிரமணியர் என்று பல பெயர்களில் அழைப்பார்கள். பல ஊர்களில் பல பெயர்களில் பல விதமான வடிவங்களில் முருகப் பெருமான் வீற்றிருக்கிறார்.

48
முருகன் கோயில்கள்

ஆனால், பார்க்கும் போது அவர் ஒரே மாதிரியாக இருப்பதாக தான் தோன்றும். உண்மையில் உருவத்திலும், சக்தியிலும் அவர் வேறுபட்டு தான் பக்தர்களுக்கு காட்சி தருவார். பொதுவாக நாம் முருகப் பெருமானிடம் வேண்டுதல் வைக்கும் போது ஏதாவது ஒரு முருகப் பெருமானின் புகைப்படத்தை வைத்து தான் வேண்டுதல் வைப்போம்.

58
முருகப் பெருமானை வழிபட வேண்டுதல் உடனே நிறைவேறும்

ஆனால், அப்படி செய்யாமல், நமது வேண்டுதல் என்னவாக இருக்கிறதோ அதற்கேற்ற முருகப் பெருமானை வழிபட வேண்டுதல் உடனே நிறைவேறும் என்பது ஐதீகமாம். அப்படி நாம் எந்த முருகனிடம் என்ன வேண்டுதல் வைக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

68
6 கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்ட முருகப் பெருமான்

எம்பெருமான் சிவனால் உருவாக்கப்பட்டு 6 கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டு இன்று தமிழ் கடவுளாக திகழும் முருகப் பெருமான் குழந்தை வரம் அருளுவார். வீடு, வாசல், வண்டி, வாகனம் அமைத்து கொடுப்பார், கடன் பிரச்சனையை தீர்த்து வைப்பார். திருமண தடை நீங்கும் இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

78
முருகப் பெருமானின் சஷ்டி திதி

மேலும், முருகப் பெருமானின் சஷ்டி திதியிலும் முருகப் பெருமானை வழிபாடு செய்யலாம். சண்முகம், சுப்ரமணியன், பால முருகன் என்று முருகப் பெருமானை 3 வகைகளில் பிரிக்கலாம். இதில், 2 கைகள் மட்டும் கொண்டிருப்பவர் தான் பால முருகன். குழந்தை வடிவில் இருக்கும் பாலமுருகனை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

88
சுப்பிரமணியர் - திருமணத் தடை நீங்கி திருமணம் நடந்தேறும்

4 கைகளை கொண்டவர் சுப்பிரமணியர். இவரை வணங்கி வழிபட திருமணத் தடை நீங்கி திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம். 12 கரங்கள், 6 முகங்களை கொண்டவர் சண்முகம். இவரை வழிபட எதிரிகள் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம். இப்படி அந்தந்த முருகப் பெருமானிடம் வேண்டுதல் வைக்க வேண்டுதல் யாவும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories