வீட்டில் பணம் குவிய! வாஸ்துப்படி இந்த திசையில் சிவனின் போட்டோவை வைங்க போதும்!!

First Published | Jun 10, 2023, 10:03 AM IST

Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் எந்த திசையில் சிவனின் போட்டோ வைப்பதால் பணம் வற்றாமல் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம். 

 வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவ தெய்வங்களின் போட்டோக்களை வைத்திருப்போம். வாஸ்து சாஸ்திரத்தின்படி, தெய்வங்களை போட்டோவை வீட்டில் வைப்பது மங்களகரமானது. ஏனென்றால் கடவுள்களின் போட்டோ வீட்டில் இருப்பது வீட்டுக்கு மகிழ்ச்சியையும், செல்வ செழிப்பையும் கொண்டு வரும்.அந்த வகையில் சிவன் போட்டோ அல்லது சிலையை நம் வீட்டில் வைத்து பூஜை செய்வது மிகவும் நல்லது. சிவனின் போட்டோ நம் வீட்டில் இருந்தால் வீட்டிற்கு சுபிட்சம் கிடைக்கும். இந்து மதத்தை பொறுத்தவரை எல்லாம் வல்ல சிவனுக்கு தனித்துவமான இடம் உண்டு. ஒருவர் சிவனின் அனுகிரகத்தைப் பெற்றிருந்தால் எவ்வளவு கடினமான சிரமமாக இருந்தாலும் அதை சமாளித்து வாழ்க்கையில் அவரால் வெற்றி பெற முடியும். 

வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளை எளிதாக கையாள வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் வீட்டில் சிவனுடைய போட்டோ மற்றும் அவரது சிலையை வாஸ்து விதிகளின்படி வைத்து வழிபடுங்கள்.  

சிவன் போட்டோ வாஸ்து: 

வீட்டில் சிவன் உக்கிரமாக இருக்கும் போட்டோவை வைக்கக்கூடாது. சிவனுடைய கோபமான நிலை அழிவின் அடையாளம். இது மாதிரியான போட்டோவை வீட்டில் வைப்பது குடும்பத்தின் சந்தோஷம், நிம்மதி, செல்வம் ஆகியவற்றில் தடைகளை உண்டாக்கும். 

Tap to resize

எப்படிப்பட்ட சிவனை வைக்கலாம்? 

வீட்டில் சிவனின் போட்டோவை வைக்க நினைப்பவர்கள் அவருடைய மகிழ்ச்சியான முகபாவனை கொண்ட போட்டோவை வைக்கலாம். சிவன் மகிழும் போட்டோவை வீட்டில் வைப்பதால் குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி பெருகும். குறிப்பாக சிவன் தனியாக இருக்கும் போட்டோவை வைப்பது விடவும் சிவன் குடும்பமாக பார்வதியின் விநாயகர், முருகன் சகிதம் வீற்றிருக்கும் போட்டோவை வைப்பது நல்ல பலன் தரும். 

தூய்மையாக வையுங்கள்: 

வீட்டில் தெய்வங்களின் போட்டோவை வைக்கும் போது தூசிபடிய விடக்கூடாது. அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் சிவன் போட்டோ அல்லது சிலையை தூய்மையாக பராமரியுங்கள். அதன் மீது தூசி, அழுக்கு போன்றவை படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை சிவனின் சிலை அல்லது போட்டோ மீது தூசி படிந்து இருந்தால் அது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும். நல்லது நடப்பதற்கு பதிலாக கெட்டது நடக்கும். 

எந்த திசையில் சிவன் போட்டோ இருக்க வேண்டும்? 

வாஸ்துபடி, வீட்டில் சிவன் போட்டோ அல்லது சிலையை நிறுவினால் வடக்கு திசையில் வையுங்கள். வடக்கு நல்ல திசை. இங்கு செல்வத்தின் அறிகுறி உள்ளது. சிவபெருமான் வீற்றிருக்கும் கைலாய மலை கூட வடக்கில் தான் அமைந்துள்ளது. 

இதையும் படிங்க: மறந்தும் தானமாக இந்த 1 பொருளை கொடுக்காதீங்க!! மீறினால் துரதிர்ஷ்டமும் தரித்திரமும் உங்களை ஆட்டிப் படைக்கும்!!

Latest Videos

click me!