பெண்களின் இடது கண் துடித்தால் என்ன நடக்கும் ..? அதிஷ்டத்தை கொடுக்குமா..??

First Published | Jan 29, 2024, 6:53 PM IST

கண் துடிப்பது என்பது பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஒரு பொதுவான நிகழ்வாகும். இதற்கு பல்வேறு வகையான காரணங்கள் உள்ளன. ஆனால் ஜோதிடத்தில் கண் துடிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.

பொதுவாகவே, நம் அனைவருக்கும் கண் துடிப்பது சகஜம். ஆனால் இந்த ஜோதிட சாஸ்திரப்படி கண் துடிப்பது கெட்டது மற்றும் நல்லது நடக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அறிவியலின் படி.. இது சில மருத்துவ பிரச்சனைகளால் நடப்பதாக கூறப்படுகிறது. 
 

ஜோதிட சாஸ்திரப்படி, கண் துடிப்பது ஆண்களுக்கு ஒன்று, பெண்களுக்கு வேறு. இந்த வரிசையில், பெண்களின் இடது கண் துடித்தால் என்ன நடக்கும்.? இப்போது அதுகுறித்து இங்கு பார்க்கலாம்..

Tap to resize

பெண்களின் இடது கண் துடிப்பதன் அர்த்தம்:

புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்: ஒரு பெண்ணுக்கு இடது கண் துடித்தால் பயப்படத் தேவையில்லை. ஏனெனில் இடது கண் துடிப்பது, விரைவில் வீட்டில் மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடக்கும். மேலும் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க வாய்ப்பும் உண்டு.
 

நற்செயல்களைத் தொடங்குவீர்கள்: பெண்ணின் இடது கண் துடித்தால் நல்லது என்கிறார்கள் ஜோதிடர்கள். மேலும் பெண்ணின் இடது கண் துடிப்பது அவர்கள் ஏதாவது நல்ல வேலையைச் செய்யப் போகிறார்கள் என்று அர்த்தம். 
 

புதிய வேலை கிடைக்கும்: அதேபோல், பெண்களின் இடது கண் துடிப்பது, புதிய வேலைகளுக்கு உகந்தது என்று கூறப்படுகிறது. இடது கண் பெண்களுக்கு மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்று சொல்லலாம்.

இதையும் படிங்க:  உங்கள் கண் துடித்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா? ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன?

பணம் கிடைக்கும்: பெண்களின் இடது கண் துடித்தால், நீங்கள் எதிர்காலத்தில் விரைவில் பணம் சம்பாதிப்பீர்கள் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். மேலும்
விரைவில் பண லாபம் கிடைக்கும் என்று அர்த்தம். 

இதையும் படிங்க:  கண்கள் துடிப்பது சுபமா? அதுவும் பெண்களுக்கு இந்த கண் துடித்தால் சுப ராசியாம்!!

விருந்தாளிகள் வருவார்கள்: அதுமட்டுமல்லாமல் ஜோதிட சாஸ்திரப்படி, இடது கண் துடிப்பது வீட்டிற்கு விருந்தாளிகள் வருவார்கள் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்கிறார்கள். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அறிவியலின் படி: கண் துடிப்பதற்கு சில அறிவியல் காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். கம்ப்யூட்டர், செல்போன், டிவி போன்றவற்றை நீண்ட நேரம் பார்ப்பதால் இப்படி நடப்பதாக கூறப்படுகிறது. அதே போல சரியான ஓய்வு இல்லாததால் கண் துடிப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Latest Videos

click me!