Weekly Horoscope : இந்த வார ராசி பலன்! (Nov 21st To 27th )மிதுனம், ரிஷபம் - ஜாக்கிரதை! மற்ற ராசிகளுக்கு உள்ளே

Weekly Horoscope 2022 - (November 21st to 27th 2022) Rasipalan: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இந்த 2022 ஆம் ஆண்டின், (21 நவம்பர் முதல் 27 நவம்பர் 2022 வரை உள்ள) 12 ராசிகளின் பலன்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
 

மேஷம்:
இந்த வாரம் எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். மொபைல் சாதனங்களுக்கு அடிமையாவதால் உங்கள் கற்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம். மருத்துவம் பயிலும் மாணவர்கள் இந்த வாரம் சிறப்பாக செயல்படலாம். ஒட்டுமொத்தமாக, வேலை, பெற்றோர், காதல் உறவுகளின் மன அழுத்தம் காரணமாக இந்த வாரம் உங்கள் மன ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த வாரம் முதலீடு செய்வதற்கான நேரம் அல்ல. குடும்ப செலவுகள் கூடும். சொத்துக்களைப் பற்றி முடிவெடுப்பதற்கு இந்த வாரம் உகந்தது அல்ல.

ரிஷபம்:
இந்த வாரம் உங்கள் உறவில் சில தவறான புரிதல்கள் இருக்கலாம். உங்கள் செலவுகள் உயரக்கூடும், ஆனால் முந்தைய முதலீடுகள் மற்றும் வணிக நடவடிக்கைகளில் இருந்து லாபம் பெறலாம். திங்கட்கிழமை உங்களுக்கு சக ஊழியர்களுடன் சில பிரச்சனைகள் எழலாம். அடுத்த வாரம் உங்கள் தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். உங்களில் சிலர் அல்லது அறிமுகமானவருடன் புதிய தொழிலைத் தொடங்க விரும்பலாம்.


மிதுனம்
இந்த வாரம் மன அழுத்தம், அதிக சிந்தனை மற்றும் உடல்நலப் பிரச்சனைகளைச் சமாளிக்க சரியான உணவு, ஓய்வு, உடற்பயிற்சி தேவை. உங்கள் திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் இந்த வாரத்தை சிறப்பாக மாற்றும். முந்தைய முதலீடுகளில் நிலையான வருமானம் உண்டு. நீங்கள் ஒரு சர்வதேச நிறுவனத்தில் பணிவாய்ப்பு அல்லது வெளிநாட்டு பயணம் கைகூடும்.

கடகம்:
இந்த வாரம் உங்களுக்கு ஒரு நல்ல, ஆரோக்கியமான வாரமாக இருக்கலாம். மிக வேகமாக அல்லது மிக மெதுவாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும், விபத்துகளைத் தவிர்க்க எச்சரிக்கையுடன் செயல்படவும். இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ரியல் எஸ்டேட் அல்லது முந்தைய முதலீடுகள் கணிசமான வருமானத்தை அளிக்கலாம். தொழில் அல்லது வணிகம் ஆகியவற்றில் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

சிம்மம்:
இந்த வாரம் உறவினர்கள் கைகொடுப்பார்கள். மனம் மகிழ்ச்சியடையும். உங்கள் ஒருதலைக் காதல் கனிந்திருக்கும். உங்களுக்கு முன்னால் ஒரு சிறந்த வாரம் உள்ளது. உங்கள் உடல்நலம் பாதிக்கப்படாமல் இருப்பதால் வரும் வாரத்தில் புதிய நம்பிக்கை பிறக்கும். உங்கள் செலவுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும். கட்டுக்குள் வைத்திருங்கள். கைமீறிவிட்டால் வாராந்திர நிதிகளை நிர்வகிப்பது மிகவும் கடினமாகிவிடும்.

கன்னி:
இந்த வாரம் உங்களுக்கு மிக வேகமாக நகரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நலவும். பொருளாதார நலன்களில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். வணிகம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பணம் அல்லது பொருள் கொடுக்கல் வாங்கல்களில் முன்யோசனை அவசியம். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கலாம். நட்பு வட்டாரத்தில் வாக்குவாதத்தை தவிர்க்கவும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

துலாம்:
வார தொடக்கத்தில், ​​உங்கள் கடந்த காலம் தொடர்பான சில கவலைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால், இந்த வாரம் நீங்கள் விரைவில் குணமடைய உதவும். இந்த வாரம் வளர்ச்சி மற்றும் ஆதாயத்திற்கான சில சிறந்த வாய்ப்புகள் இருந்தாலும், எந்தவொரு நிதிப் பொறுப்புகளையும் தவிர்க்கவும். உங்களின் விவேகமான நிதி மேலாண்மை மற்றும் நேர்மறையான செயல்கள் உங்களைப் படிப்படியாக முன்னேற்றும்.

விருச்சிகம்:
தொழில்நுட்பம், பாதுகாப்பு, கட்டுமானம் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில் உள்ளவர்கள் முடிந்தவரை வெற்றிகளை குவிப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் தொடர்ந்து மேம்படும், இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். இது எதிர்காலத்தில் கடுமையான பிரச்சனையை சந்திக்கலாம். உங்களுக்கு ஒரு நல்ல, ஆரோக்கியமான வாரம் காத்திருக்கிறது.

தனுசு:
இந்த வாரம் உங்கள் நம்பிக்கைக்கு சிறந்த வாரமாகும். ஒரு வேலை முடிவடையும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள். புத்தம் புதிய முன்முயற்சிகளைத் தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது, நீண்ட காலமாக காதலர்களாக இருப்பவர்கள் திருமணம் செய்வதற்கு முன் பெரியவர்களின் ஒப்புதலைப் பெறலாம். இந்த வாரத்தின் முதல் பகுதியில் உங்களுக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் இருக்கலாம், ஆனால் வாரம் முழுவதும் நீங்கள் நன்றாகவே இருப்பீர்கள்.

மகரம்:
இந்த வாரம் முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவதன் மூலம் ஆரோக்கியம் பெறலாம். யோகா பயிற்சி மற்றும் பயனங்கள் மன அமைதியை தரும். உங்கள் வாழ்க்கையில் தவறான புரிதல்கள் ஏற்படலாம், கவனமாக இருங்கள். உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் அமைதியாக இருப்பதன் மூலம் உங்கள் உறவை வலுப்படுத்த முடியும். உங்கள் அலுவலகம் அல்லது வீட்டில் சில பதற்றத்தை நீங்கள் உணரலாம். இந்த வாரம் உங்கள் எண்ணங்களை தெளிவாக வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். வேலை சம்பந்தமாக சில டென்ஷன் வரலாம்

கும்பம்:
இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். உங்கள் உறவுகள் மிகுந்த அன்பும் அக்கறையும் நிறைந்ததாக இருக்கலாம். திருமணமான தம்பதிகள் காதல் மற்றும் பாசத்தின் புரிதலை உணர்வீர்கள். மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் கணிசமாக மேம்பட்டிருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு, இந்த வாரம் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கிறது. எந்தவொரு சவாலான சூழ்நிலையிலும் பீதி அடைய வேண்டாம், ஏனெனில் நீங்கள் அவற்றை எளிதாக எதிர்கொள்ள முடியும். உங்களை நம்பி முழு நம்பிக்கையுடன் முன்னேறுங்கள். உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். இது உங்கள் வேலையைத் தொடர உங்களை மேலும் ஊக்குவிக்கும்.

Latest Videos

click me!