மறந்தும் கூட இந்த 4 பொருட்களை காலியாக வைக்காதீங்க... மீறினால் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்யமாட்டாள்!!

First Published | Jun 26, 2023, 2:40 PM IST

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் இருக்கும் சில பொருள்களை எதுவும் வைக்காமல் வெறுமையாக வைக்கக் கூடாது. 

வாஸ்து சாஸ்திரத்தில் ஒவ்வொரு திசைக்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒரு வீடு அல்லது நிறுவனத்தில் ஏதேனும் வாஸ்து குறைபாடு இருந்தால், எதிர்மறை ஆற்றல் எப்போதும் இருக்கும். இதன் காரணமாக அந்த நபரின் வாழ்க்கையில் முன்னேற்றம், மகிழ்ச்சி, செழிப்பு என்று எதுவும் இருக்காது. 

வாஸ்து தோஷம் இல்லாத வீடுகளில் லட்சுமி தேவியின் அருள் எப்போதும் இருக்கும். வாஸ்து சாஸ்திரத்தில் திசைகளைத் தவிர, வீட்டில் சில பொருள்கள் விதிப்படி இல்லாவிட்டாலும், வாஸ்து தோஷங்கள், வறுமை இருக்குமாம். அந்த பொருள்கள் என்ன என்பதை காணலாம். 

பர்ஸ் மற்றும் பீரோ:  

உங்கள் பீரோவிலும், பணப்பையிலும் எப்போதும் நிறைய பணம் இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், வாஸ்து சாஸ்திரத்தின் விதியைப் பின்பற்ற வேண்டும். வாஸ்து படி, பணம் வைக்கும் பெட்டியோ, பர்ஸ் போன்ற பணப்பைகளோ ஒருபோதும் காலியாக இருக்கக்கூடாது. அதில் எப்போதும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். நீங்கள் அதை காலியாக வைத்திருந்தால், மகாலட்சுமி கோபம் கொள்வார். லட்சுமி தேவியின் கோவம் தவிர்க்க, கொஞ்சம் பணம், மஞ்சள், கோமதி சக்கரம், மஞ்சள் போன்றவற்றை சிவப்பு துணியால் சுற்றி பீரோ லாக்கர் அல்லது பர்ஸில் வைக்க வேண்டும். இந்த வாஸ்து பரிகாரத்தால் மகாலட்சுமி எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பாள். 

Tap to resize

குளியலறையில் காலி வாளியை வைக்க வேண்டாம்: 

வாஸ்து சாஸ்திரத்தின்படி, குளியலறையில் காலி வாளியை வைக்கக் கூடாது. குளியலறையில் வைக்கப்பட்டுள்ள வாளியில் தண்ணீர் நிரப்பப்படாத அந்த வீடுகளில் மிக விரைவாக எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் நுழைகின்றன. இது தவிர, கருப்பு அல்லது உடைந்த வாளிகளை குளியலறையில் பயன்படுத்தக்கூடாது. இப்படிச் செய்வதால், வீட்டில் பணப் பிரச்சனைகளுடன் வாஸ்து தோஷங்களும் ஏற்படுகின்றன. 

பூஜையறையில் தண்ணீர் பாத்திரம் நிரம்பி இருக்கவேண்டும்!! 

வீட்டின் பூஜை அறை மிகவும் சிறப்பு வாய்ந்தது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, பூஜையறையில் வைக்கப்படும் தண்ணீர் பாத்திரத்தில் ஒருபோதும் தண்ணீர் இல்லாமல் இருக்கக் கூடாது. இது அசுபமாகக் கருதப்படுகிறது. கொஞ்சம் தண்ணீர், கங்கை நீர், துளசி இலைகள் எப்போதும் தண்ணீர் பாத்திரத்தில் இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தின் மூலம், கடவுளின் அருள் உங்கள் குடும்பத்தின் மீது எப்போதும் இருக்கும். இது மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. 

இதையும் படிங்க: உங்கள் வீட்டில் மறந்தும் கூட இந்த பொருட்களை வைக்காதீங்க... எதிர்மறை சூழ்ந்து கொள்ளும்..!!

சமையலறை வாஸ்து: 

அன்னபூரணியின் ஆசி சமையலறையில் வைக்கப்பட்டுள்ள உணவு பொதியல்களில் உள்ளது. வாஸ்து விதிப்படி வீடுகளில் உணவுப் பாத்திரத்தில் சில பொருட்கள் இருக்க வேண்டும். அதாவது உணவு சேமிப்பு கலன் காலியாக இருக்கக் கூடாது. இதை செய்வதால் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரும். 

இதையும் படிங்க: வீட்டில் புறா கூடு கட்டினால் தடுக்காதீங்க... துரதிர்ஷ்டம் கூட அதிர்ஷ்டமாக மாறும்!!

Latest Videos

click me!