இஸ்லாமிய நாட்காட்டியின் படி, துக்ஹஜ் மாதம் 12வது மற்றும் கடைசி மாதமாகும். உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் இந்த மாதம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இஸ்லாமியத்தின் முக்கிய நடைமுறைகளில் ஒன்றான ஹஜ் இந்த மாதத்தில் செய்யப்படுகிறது. பக்ரீத் பண்டிகையை ஈத் அல் அதா என்றும் அழைக்கப்படுகிறது.
ஈத்-உல்-ஜுஹா ஒவ்வொரு ஆண்டும் துல் ஹிஜ்ஜாவின் 10 வது நாளில் தான் வருகிறது. இந்நாள் பக்ரீத் பண்டிகையாக இஸ்லாம் பின்பற்றுபவர்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு சவுதி அரேபியா தவிர மற்ற நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா மற்றும் சிங்கப்பூர் போன்றவை ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடுகிறது.
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் துல் ஹிஜ்ஜாவின் முதல் நாள் 2023 ஜூன் 20 செவ்வாய்க் கிழமை தான். ஆகவே ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்.
ஜப்பான்:
ருயத்-இ-ஹிலால் கமிட்டி-ஜப்பானின் கூற்றுப்படி, துல் ஹிஜ்ஜாவின் முதல் நாள் ஜூன் 20 (செவ்வாய்க்கிழமை). ஆகவே, பக்ரீத் பண்டிகை ஜூன் 29ஆம் தேதி வியாழன் அன்று இருக்கும்.
சவூதி அரேபியா:
சவூதி அரேபியாவில் துல் ஹிஜ்ஜாவின் முதல் நாள் 19ஆம் தேதி ஜூன் திங்கட்கிழமை என்று சவுதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே, அந்த நாட்டில் பக்ரீத் பண்டிகை வரும் 28ஆம் ஜூன் தேதி வரும்.
தமிழ்நாடு:
தமிழ்நாட்டில் வருகிற ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி சலாஹூதீன் முகமது அயூப் அறிவித்திருக்கிறார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்:
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) துல் ஹிஜ்ஜா மற்றும் ஈத்-உல்-அதா 2023க்கான தேதிகள் இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை.
துல் ஹிஜ்ஜா சந்திரனைப் பார்க்க முடியாத நாடுகள் 29ஆம் தேதி ஜூனில் ஈத்-உல்-அதாவைக் கொண்டாடும். ஜூன் 29 அன்று பக்ரீத் பண்டிகையை அறிவித்த சில நாடுகள் மலேசியா, புருனே, இந்தோனேசியா, மொராக்கோ ஆகியவை ஆகும்.
இதையும் படிங்க: Bakrid 2023: தமிழ்நாட்டில் எப்போது பக்ரீத் பண்டிகை கொண்டாடனும்? முக்கிய அறிவிப்பு வெளியானது!!