Vastu tips: மயிலிறகை இப்படி பயன்படுத்துங்க.. பலவிதமான பலன்களை பெறுவீங்க..!!

Published : Jun 20, 2023, 03:15 PM ISTUpdated : Jun 20, 2023, 08:20 PM IST

பணத் தட்டுப்பாடு வரக்கூடாது, வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்கள் வீட்டில் மயிலிறகுகளை சரியான திசையில் வைத்து வீட்டில் வைக்கு வேண்டும்.  

PREV
17
Vastu tips: மயிலிறகை இப்படி பயன்படுத்துங்க.. பலவிதமான பலன்களை பெறுவீங்க..!!

இந்து மதத்தில் ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டும். வாஸ்து சாஸ்திரம் சரியான திசைகளைப் பற்றிய தகவல்களை உங்களுக்குத் தரும் அதே வேளையில், ஜோதிடம் எதிர்கால நிகழ்வுகள் மற்றும் வாழ்க்கை தொடர்பான ஒவ்வொரு அம்சத்தின் நிலையையும் கூறுகிறது. இந்த இரண்டு சாஸ்திரங்களிலும், மங்களகரமான படங்கள், சின்னங்கள் மற்றும் விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. அவை அணிவதன் மூலமோ அல்லது உங்களுடன் வைத்திருப்பதன் மூலமோ உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த மங்களகரமான விஷயங்களில் ஒன்று தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மயில் இறகு அடங்கும்.

27

ஆம், மயில் இறகுகள் இந்து மதத்தில் கிருஷ்ணருடன் தொடர்புடையது. அதனால்தான் இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மயில் இறகுகளை வீட்டில் வைப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால் அதை நீங்கள் சரியான திசையிலும், இடத்திலும் வைத்திருந்தால் மட்டுமே இந்த நன்மைகளைப் பெறுவீர்கள். எனவே வீட்டில் மயில் தோகை வைப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

37

தடைப்பட்ட வேலைகள் முடியும்:
நீண்ட நாட்களாக சில வேலைகளைச் செய்ய முயற்சித்தும் அல்லது நல்ல நோக்கத்துடன் சில வேலைகளைச் செய்தாலும் அதில் வெற்றி கிடைக்காமல் போனால், மயில் தோகையை உங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும். மயில் இறகு உங்கள் தடைப்பட்ட வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பதோடு உங்கள் வேலையிலும் வெற்றி கிடைக்கும். இதற்கு உங்கள் படுக்கையறையில் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் மயில் இறகுகளை வைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடிவடைந்து மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள்.

47

பணத்திற்கு பஞ்சம் இருக்காது:
நீங்கள் நிதிப் பிரச்சனையில் சிரமப்படுகிறீர்களானால், உங்கள் அலுவலகத்தில் தென்கிழக்கு திசையில் மயில் இறகுகளை வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு ஒருபோதும் பணத் தட்டுப்பாடு இருக்காது. மேலும் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளையும் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

57

உங்கள் எதிரி நண்பர்களாக மாறுவார்கள்:
மயில் இறகு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதிலிருந்துநேர்மறை ஆற்றல் அதிலிருந்து வெளிவருகிறது. எனவே, அதை உங்களுடன் வைத்திருப்பது மக்கள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தவகையில் உங்களுக்கு எதிரி யாராவது இருந்தால், அவர் பெயரில் எப்போதும் ஒரு மயில் தோகை உங்களிடம் இருக்க வேண்டும். இது உங்களுக்கும் அவருக்கும் இடையிலான கசப்பான உறவை நீக்கும்.

67

வாஸ்து தோஷம் தீரும்:
உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்க வேண்டுமானால், உங்கள் வீட்டின் பிரதான கதவில் மயில் தோகையை வைக்க வேண்டும். மேலும் வீட்டின் பிரதான கதவை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கதவில் மயில் இறகுகோடு, விநாயகர் சிலையையும் சேர்த்து வைக்கவும். இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கும்.

77

குழந்தைகள் பாடம் படிப்பதில் ஆர்வம் அதிகரிக்க:
உங்கள் வீட்டில் படிக்கும் குழந்தைகள் இருந்தால், அவர்கள் படிக்கும் அறையில் கண்டிப்பாக மயில் இறகுகளை வைக்க வேண்டும். இதனால், குழந்தைகள் படிக்க, எழுதுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவ்வாறு செய்வதால், அவர்கள் தான் வகுப்பில் முதலிடம் வருவர். மேலும் அவர்களின் கையெழுத்து மாற மயில் இறகை அவர்களது புத்தகத்தின் நடுவில் வைக்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories