மறந்தும் பர்ஸில் இந்த பொருளை வைக்காதீங்க! காசு கையில் நிற்காமல், தரித்திரம் பிடிக்கும்!!

First Published | Apr 28, 2023, 3:58 PM IST

பர்ஸில் பணம் சேர வேண்டுமென்றால் எதை செய்யக் கூடாது என்பதை இந்தப் பதிவு விளக்குகிறது. 

இந்து சமயத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பிட்ட வாஸ்து விதிகளை சரியாக பின்பற்றுவதன் மூலம், வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு நிலை கொள்ளும். அதே சமயம் சாதாரண அலட்சியத்தால், ஒரு நபர் எந்த நேரத்திலும் வறுமை நிலைக்கு சென்று விடுகிறார். இதை தவிர்க்க வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது அவசியம். 

வாஸ்து சாஸ்திரத்தில் நாம் உபயோகம் செய்யும் பணப்பைக்கு (பர்ஸ், சுருக்கு பை..பிற) சிறப்பு விதிகள் உள்ளன. வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, நாம் பணம் புழங்கும் பர்ஸ், பணப்பையில் மகாலட்சுமி வசிக்கிறார். அதனால் சில பொருள்களை பர்ஸில் வைக்கக் கூடாது. மீறி வைத்தால் செல்வம் தரும் லட்சுமி கோபம் கொள்வாள் என்கிறது வாஸ்து. இதனால் உங்களுக்கு நிதி சிக்கல் ஏற்படலாம். 


ஜோதிடர்களின் கூற்றுப்படி, முன்னோர்களின் படங்களை வீட்டின் தெற்கு திசையில் வைக்க வேண்டும். அதுவே நல்லது. மற்றபடி, முன்னோரின் படத்தை பர்ஸில் வைக்கக் கூடாது. இதை செய்வது வாஸ்துவில் தடை செய்யப்பட்டுள்ளது. காலமான முன்னோரின் படங்களை பர்ஸில் வைப்பதால் கடன் அதிகரிக்கும் என்பது ஐதீகம். 

வாஸ்து சாஸ்திரப்படி, சாவியை மறந்தும் தவறுதலாக பர்ஸில் வைக்கக் கூடாது. சாவியை பர்ஸில் வைத்தால், பணப் பிரச்னை ஏற்படும். நீங்கள் ஏழ்மை நிலைக்கு போகலாம். வீட்டில் எதிர்மறை ஆற்றல் நிலவும். கிழிந்த ரூபாய் நோட்டுகளை பர்ஸில் வைத்திருப்பதும் நல்லதல்ல. இது வாஸ்து குறைபாட்டை உருவாக்கும்.  

நீங்கள் பயன்படுத்தும் பர்ஸ் பழையதாகவோ அல்லது கிழிந்ததாகவோ இருந்தால், அதை விரைவில் மாற்றுங்கள். கிழிந்த நோட்டுகள் அல்லது கிழிந்த பர்ஸை வைத்திருப்பது வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. இப்படி செய்வது பணத்தை அலட்சியம் செய்வது போலாகும். ஆகவே லட்சுமி கோபமடைந்து, நிதி நெருக்கடி ஏற்படுகிறது. 

நீங்கள் வாஸ்துவை முழுமையாக நம்பினால், பணத்தை மடித்து பர்ஸில் வைத்திருக்காதீர்கள். பர்ஸில் நோட்டைத் திறந்து நீண்ட வாக்கில் வைப்பது எப்போதும் மங்களகரமானது. இது வருமானத் தொகையை ஈர்க்கிறது. ரூபாய் நோட்டை கசக்கி வைத்திருப்பது வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. பர்ஸில் நாணயங்களை ஒன்றாக போட்டு வைத்துக் கொள்ளக் கூடாது. நாணயங்களை வெவ்வேறு இடங்களில் வைக்கவும். 

இதையும் படிங்க: தினமும் தூங்கும் முன்பு இதை செய்யுங்கள்.! உங்களுக்கு அதிர்ஷ்டமும், நிம்மதியும் பெருகும்..

உங்களுக்கு வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை இருந்தால், தவறுதலாக கூட உங்கள் பர்ஸில் பில்களை வைக்க வேண்டாம். சிலருக்கு எதை வாங்கினாலும் பில்லை பர்ஸில் வைக்கும் பழக்கம் இருக்கும். இதனால் உங்களுடைய பொருளாதாரம் மோசமடையக்கூடும். 

ஒருவரிடமிருந்து பர்ஸ் கடன் வாங்குவது சரியல்ல என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். இது வாஸ்து குறைபாடு. இதனால், கடன் மேலும் அதிகரிக்கிறது. இதனுடன் நிதி நெருக்கடியும் வருகிறது. 

இதையும் படிங்க: சித்ரா பெளர்ணமி 2023 எப்போது? பொன்னும் பொருளும் அருளும் சித்ர குப்த வழிபாடு!

Latest Videos

click me!