Today Rasipalan 28th Apr 2023: முதலீடு செய்யணும்னா உடனே செய்யுங்க! பயணங்களை கண்டிப்பா தவிர்க்க வேண்டியது யார்?

First Published | Apr 28, 2023, 5:30 AM IST

ஏப்ரல் 28ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.
 

மேஷம்:

கிரியேட்டிவான மற்றும் சமூக  பணிகளில் பெரும்பாலான நேரத்தை செலவிடுவீர்கள். அனுபவஸ்தர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலை ஏற்று செயல்படவும். மனதை அலைபாய விடாதீர்கள். பக்குவமாக நடந்துகொள்ளுங்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
 

ரிஷபம்:

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீட்டு பராமரிப்பு வேலை தொடர்பாக திட்டமிடுவீர்கள். தகாத வார்த்தைகளை தவிர்க்கவும். உங்கள் மீது நம்பிக்கை வைக்கவும். மற்றவர்களின் ஆலோசனையை கேட்க வேண்டாம். 
 

Tap to resize

மிதுனம்:

நிலுவையில் இருந்த பணம் இன்று கிடைக்கும். எப்பேர்ப்பட்ட கடினமான வேலையையும் கடின உழைப்பின் மூலம் செய்து முடிப்பீர்கள். தேவையில்லாத செலவுகள் மனதை பாதிக்கும். அக்கம்பக்கத்தினருடனான மோதலை தவிர்க்கவும். பணிச்சுமையால் உங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாது. 
 

கடகம்:

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எதிர்காலத்திற்காக முதலீடுகளை செய்ய ஏற்ற சமயம் இது. குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும். சோம்பேறித்தனத்தால் முக்கியமான வேலையை முழுமையாக செய்ய முடியாது. புதிய வேலையை தொடங்க சரியான நேரம்.
 

சிம்மம்:

ஆன்மீக ஈடுபாடு மன அமைதி அளிக்கும். சொத்து வாங்கும் அல்லது விற்கும் வேலைகள் வெற்றிகரமாக முடியும். தவறான செயல்பாடுகளால் பட்ஜெட்டை பாதிக்கும். பெரியவர்களின் அறிவுரையை ஏற்று செயல்படவும்.  தொழில் ரீதியான முக்கியமான முடிவெடுக்க சரியான நேரம் இது.
 

கன்னி:

கடினமாக உழைக்கவும். யாருடனான எந்த விதமான பிரச்னையாக இருந்தாலும் இன்று தீர்க்கலாம். சோம்பேறித்தனம் மற்றும் கவனக்குறைவை தவிர்க்கவும். சொத்து, வாகனம் ரீதியான வேலைகளை தவிர்க்கவும். பிரச்னைகளை தீர்க்க குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனையை பெறுங்கள். 
 

துலாம்:

உங்கள் உத்யோக வேலையுடன் சேர்த்து, உங்களுக்கு பிடித்தமான வேலையை செய்யவும் நேரம் ஒதுக்குங்கள். அது உங்களுக்கு மன அமைதியையும் நிம்மதியையும் அளிக்கும். பண விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். பயணங்களை தவிர்க்கவும். 

விருச்சிகம்:

நெருங்கிய உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தேக்கமடைந்த கட்டுமான வேலைகளை முடிக்க சரியான நேரம் இது. பயணங்களை தவிர்க்கவும். நீங்களே பணிச்சுமைகளை அதிகரித்துக்கொள்ள வேண்டாம். தவறான செயல்களில் நேரத்தை வீணடிக்காமல், முக்கியமான வேலையில் கவனம் செலுத்துங்கள். 
 

தனுசு:

மீடியா மற்றும் ஆன்லைன் தொடர்பான செயல்களில் அதிக கவனம் செலுத்தவும். உங்கள் திட்டங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்தவும். முதிர்ச்சியுடன் செயல்படவும். தொழிலில் முதலீடு செய்ய சரியான நேரம்.
 

மகரம்:

இன்று உங்களுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும். மன உறுதியுடன் கடினமான வேலைகளையும் செய்து முடிக்க முயலுங்கள். மற்றவர்களின் அறிவுரையை கேட்டாலும் முடிவை நீங்களே எடுங்கள். பொருளாதார ஆதாயமளிக்கும் தொடர்புகள் கிடைக்கும்.  குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். 
 

கும்பம்:

வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்வதன் மூலம் மன அமைதியும் நிம்மதியும் அடைவீர்கள். நெருங்கிய உறவினர் மீது அதிருப்தியும் சந்தேகமும் எழும். பண பரிமாற்றம் எதுவும் செய்ய வேண்டும். 
 

மீனம்:

கடின உழைப்பின் மூலம் எப்பேர்ப்பட்ட கடினமான வேலையையும் செய்து முடிப்பீர்கள். சோர்வாக இருந்தாலும் இன்று முழுவதும் முழு எனர்ஜியுடன் இயங்குவீர்கள். அக்கம்பக்கத்தினருடன் மோதல் போக்கை தவிர்க்கவும். தகுதிக்கு மீறி கடன் வாங்க வேண்டாம்.  தொழில் முறையாக நடக்கும்.
 

Latest Videos

click me!