ஓலை குடிசையில் இருந்து கோபுரமாக மாறிய வடபழனி முருகன் கோயில் ஒருவர் தீராத நோயுடன் உருவாக்கிய கோயில் என்று சொன்னால் நம்மளால் நம்ப முடியுமா ஆனால் இதுதான் உண்மை. கோயிலின் வரலாறையும் சிறப்புகளையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1890ம் ஆண்டு மிகவும் எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் இந்த கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் அண்ணாசாமி நாயக்கர் தீவிர முருக பக்தர் தனது சொந்த வழிபாட்டிற்காக கொட்டகையுடன் இந்த கோயில் அமைத்தர் எனவும். அங்கு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் வண்ணப்படத்தை வைத்து வழிபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
26
vadapalani murugan temple history from hut to tower
அவர் ஒரு சமயம் கடுமையான வயிறு வலியால் அவதிப்பட்டார். அவரின் நோய் தீர வேண்டி அடிக்கடி திருத்தணி மற்றும் திருப்போரூர் முருகன் ஆலயத்திற்கு சென்று வந்தார். ஒரு முறை தென் பழநி யாத்திரை சென்ற போது அங்கு ஒரு சாது சொல்லியபடி, அண்ணாசாமி தங்கியிருந்த கொட்டகையில் பழநி முருகன் உருவ படம் வைத்து வழிபட்டார். தன்னுடைய நாக்கை அறுத்து முருகனுக்கு காணிக்கையாக்கினார் இதற்கு "பாவாடம்" என்று பெயர்.
36
வடபழனி முருகன் கோயில் வரலாறு: ஓலைக் குடிசையில் தொடங்கி கோபுரமாய் உயர்ந்த கதை!
இதனால் அவருடைய வயிற்றுவலி நீங்கியது. நாளடைவில் அவர் முருகப்பெருமானின் தெய்வீக சக்தியை உணரத்தொடங்கினார். அதன் பின் அவர் சொல்லக்கூடிய “அருள்வாக்கு” பலருக்கும் உண்மையாக நடப்பதாக கூறினர். அதனால் மக்கள் தங்களின் அன்றாட பிரச்னை தீர அண்ணாசாமி நாயக்கரிடம் அருள்வாக்கு பெற்றனர்.1920ல் இந்த கோயில் ராஜ கோபுரம் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டது பின்னர் மக்களின் அதிக வருகையாலும், ஆதரவாலும் கோயில் புகழ் பெற்றது. ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் தம்பதியர் இந்த ஆலயத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர்.
46
கோவிலின் அமைப்புகள்:
மூலவராக பழநி முருகன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார். முருகப்பெருமானின் காலில் பாதரட்சைகளுடன் அதாவது செருப்புடன் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் பல தெய்வங்களுக்குரிய தனிச் சன்னதிகள் உள்ளன. இங்கு வரசித்தி விநாயர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் சன்னதிகள், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி என பல சன்னதிகள் இங்கு உள்ளன.
56
பலன்கள்:
நாம் நினைத்த காரியம் நிறைவேறுவதற்காக இக்கோயிலுக்கு 6 வாரங்கள் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை வந்தால் விரைவில் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. திருமணத்தில் தடை இருப்பவர்களுக்கு எனக்கு திருமணம் நடைபெற்றால் இந்த கோயிலில் தான் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வேண்டிக் கொண்டால் அது விரைவில் நடக்கும் என்றும் அவர்கள் சொன்னபடியே திருமணத்தைக் கோயிலில் நடத்தி வருகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இங்கு வந்து வேண்டிக்கொண்டு அதன் காணிக்கையாக முட்டையடித்து காது குத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது அது மட்டுமல்லாமல் வளைகாப்பு நிகழ்ச்சி கூட இங்கு வைத்து நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
66
திருவிழாகள்:
வைகாசி விசாகத் திருவிழா 11நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் மற்றும் விழாக் காலங்களில் 'தெப்போற்சவம்' நடைபெறுகிறது. ஆனி மற்றும் ஆடிக் கிருத்திகையில் சிறப்பு பூசை மேற்கொள்ளப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா சூர சம்காரத்துடன் சிறப்பாக நடக்கிறது. ஜனவரி 1ஆம் தேதி மற்றும் சித்திரை ஒன்றாம் தேதியும் கோயிலில் சிறப்பான விழாக்களாக நடைபெறுகிறது.