இந்திய ஆன்மிக மரபில் தெய்வீக சக்திகளின் இருப்பிடமாக கருதப்படும் அரச மரத்தை வழிபடுவதன் முக்கியத்துவத்தை இந்த கட்டுரை விளக்குகிறது. சில கிழமைகளில் அரச மரத்தை வழிபட்டால் நினைத்த காரியங்கள் நடைக்கும் என்கிறது ஆன்மிகம்.
இந்திய ஆன்மிக மரபுகளில் அரச மரம் (அசுவத்த மரம்) தெய்வீக சக்திகளின் இருப்பிடமாக கருதப்படுகிறது. சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரின் சக்தியும் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும் மரமாக இது போற்றப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே அரச மரத்தை சுற்றி வலம் வந்து வழிபடுவது வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை உருவாக்கும் ஒரு சக்திவாய்ந்த பரிகாரமாக நம்பப்படுகிறது.
26
திங்கட்கிழமை – மன அமைதி, நல்ல செய்திகள்
திங்கட்கிழமை அரச மரத்தை சுத்தமாகச் சுற்றி வலம் வந்து சிவ நாமத்தை மனதில் ஜபித்தால், மனக்கவலைகள் குறையும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தாமதமாகி வரும் நல்ல செய்திகள் திடீரென கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து, வாழ்க்கையில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
36
செவ்வாய்கிழமை – வெற்றி, தைரியம்
செவ்வாய்கிழமை அரச மரத்தை சுற்றி வந்தால், தொடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக வழக்குகள், போட்டித் தேர்வுகள், வேலை சார்ந்த முயற்சிகளில் தடைகள் அகலும். செவ்வாய்க்கிழமை முருகன் அல்லது ஹனுமான் நினைவுடன் வழிபட்டால் தைரியம், செயல் திறன் அதிகரிக்கும்.
புதன்கிழமை அரச மரத்தை சுற்றி வழிபடுவது தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தை தரும். புதிய வாடிக்கையாளர்கள் சேர்வார்கள். பணப்புழக்கம் மேம்படும். புத்தி கூர்மை, பேசும் திறன் அதிகரிப்பதால் ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மாணவர்களுக்கும் இந்த வழிபாடு கல்வி முன்னேற்றத்தை தரும்.
56
சக்தி தரும் பக்தி
அரச மரத்திற்கு அருகில் நெய் விளக்கு ஏற்றுதல், பால் அல்லது நீர் ஊற்றுதல், 3, 7 அல்லது 11 முறை வலம் வருதல் சிறப்பான பலன்களை தரும். காலையில் வெறும் வயிற்றில் வழிபடுவது இன்னும் அதிக சக்தி அளிக்கும் என நம்பப்படுகிறது. பெண்கள் குடும்ப நலன் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டி இந்த வழிபாட்டை செய்வது சிறந்தது.
66
வெற்றி, அமைதி, செல்வம் தரும் வழிபாடு
எளிமையான ஆனால் ஆழமான ஆன்மிக சக்தி கொண்ட அரச மர வழிபாடு, வாழ்க்கையில் வெற்றி, அமைதி, செல்வம் ஆகியவற்றை ஈர்க்கும் ஒரு தெய்வீக வழியாகும். வாரந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் இந்த வழிபாட்டை முறையாக செய்தால், நல்ல விஷயங்கள் தானாகவே உங்களை தேடி வரும் என்பதில் ஐயம் இல்லை.