திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு! இனி அறை புக்கிங்கில் புதிய விதி அமல்!

Published : Mar 05, 2025, 01:55 PM IST

திருமலையில் விஐபி தங்குமிடங்களுக்கு புதிய விதி வந்துள்ளது. தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே விஐபிக்களுக்கு அறைகள் ஒதுக்கப்படும். முறைகேடுகளைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) கூறியுள்ளது.

PREV
14
திருப்பதி செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு! இனி அறை புக்கிங்கில் புதிய விதி அமல்!
Know Tirupati Devasthanam Rules for Pilgrims in 2025

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), திருமலையில் விஐபிக்களுக்கு தங்குமிட வசதிகளை ஒதுக்குவதற்கான புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல், திருப்பதி தரிசனத்துக்கு தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே விஐபிக்களுக்கு அறைகள் ஒதுக்கப்படும்.

24
TTD Imposes New Regulations

திருமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்காக மொத்தம் 7,500 அறைகளை தேவஸ்தானம் நிர்வகிக்கிறது. இவற்றில் 3,500 அறைகள் பொது மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, 1,580 அறைகள் முன்பதிவு முறையில் கிடைக்கின்றன. 400 அறைகள் தேவஸ்தானத்திற்கு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 450 அறைகள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றன. மீதமுள்ள அறைகள் முன்பதிவு முறையின் கீழ் விஐபிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

34
Tirupati Temple New Rules

ஆனால், இந்த விஐபி அறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்த பல புகார்கள் எழுந்துள்ளன. தரகர்கள் போலியான ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி அறைகளைப் பெற்று, அவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அறைகளை இரண்டு நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்பதால், தரகர்கள் அவற்றை வாடகைக்கு விட்டு, அதிக தொகை வசூலித்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

44
Tirumala Rules for VIP Room booking

இந்த முறைகேட்டைத் தடுக்க, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. புதிய விதிமுறையின் கீழ், VIP அறைகளை முன்பதிவு செய்ய பத்மாவதி விசாரணை மையம், MBC மற்றும் TB கவுண்டர்கள் உள்ளிட்ட நியமிக்கப்பட்ட கவுண்டர்களில் தங்கள் ஆதார் அட்டை மற்றும் தரிசன டிக்கெட் இரண்டையும் காண்பிக்க வேண்டும். இந்த விதி அங்கீகரிக்கப்படாத வழிகளில் அறைகள் ஒதுக்கீடு நடைபெறுவதைத் தடுக்க முடியும் என்று தேவஸ்தான அதிகாரிகள் நம்புகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories