உங்கள் வீட்டில் மறந்தும் கூட இந்த பொருட்களை வைக்காதீங்க... எதிர்மறை சூழ்ந்து கொள்ளும்..!!

First Published | Jun 24, 2023, 10:22 AM IST

உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறையை தவிர்க்க வாஸ்துபடி வீட்டில் சில பொருட்களை வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
 

உங்கள் வீட்டில் உள்ள விஷயங்கள் வாஸ்து படி இல்லாவிட்டாலும், எதிர்மறை ஆற்றல் அதிகரித்து, அது உங்களுக்கு மனதளவிலும், உடலளவிலும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அத்தகைய சூழ்நிலையில், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலைக் குறைக்க வாஸ்து சாஸ்திரம் மட்டுமே உதவுகிறது. 

ஆம், வாஸ்துவின் கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், வீடுகளில் அமைதி மற்றும் செழிப்பை அதிகரிக்க செய்யும். எனவே, நீங்கள் ஒரு நல்ல மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், வாஸ்து படி ஒரு வீட்டை வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஆகையால், மன அழுத்தமில்லாத அமைதியான வாழ்க்கையை உங்கள் குடும்பத்துடன் அனுபவிக்க அழகான கனவு இல்லத்தில் வைக்கக்கூடாத சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாம். மேலும், வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு நிலைத்திருக்க , ஒரு நேர்மறையான சூழலில் வாழ்வது மிகவும் முக்கியம்.

Latest Videos


கண்ணாடி:
கண்ணாடி மிகப்பெரிய வாஸ்து குறைபாட்டை தடுக்கும் கருவியாக கருதப்படுகிறது. கற்பனை செய்ய முடியாத அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை ஈர்க்கும் திறன் கண்ணாடிக்கு உள்ளது. ஆனால், ஒரு வீட்டில் கண்ணாடி வாஸ்து விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி இல்லாவிட்டால், அது துரதிர்ஷ்டத்தையும் எதிர்மறையையும் அதிகரிக்கும். கண்ணாடியைப் பயன்படுத்தும் போது இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்;

ஓவல் மற்றும் வட்ட வடிவ கண்ணாடிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

குழந்தைகள் அறையில் படிக்கும் மேஜைக்கு அருகில் கண்ணாடியைத் தொங்கவிடுவதைத் தவிர்க்கவும். இது படிப்பில் கவனம் செலுத்துவதைக் குறைக்கும்.

எதிரெதிர் கண்ணாடிகளை ஒருபோதும் வைக்க வேண்டாம். இது பொறுமையின்மையை ஏற்படுத்துகிறது மற்றும் அமைதியற்ற ஆற்றலை அதிகரிக்கிறது.

உடைந்த சிலைகளை வைப்பதை தவிர்க்கவும்:
வாஸ்து சாஸ்திரத்தின்படி, இதுபோன்ற பொருட்களை வீட்டில் வைக்கக்கூடாது. அதனால் வீட்டில்  சண்டைகள் மற்றும் அமைதியின்மை அதிகரிக்கும். ஆகையால் வீட்டிலிருந்து எதிர்மறை சக்தியை விரட்ட, உடைந்த கண்ணாடி மற்றும் உடைந்த சிலைகளை வீட்டில் வைக்க வேண்டாம்.

இதையும் படிங்க: நாளை பாலவாக்கம் கடற்கரை சாலையில் ஜெகநாதர் ரத யாத்திரை!!

மகாலட்சுமி தேவியின் சிலை:
மகாலட்சுமி தேவியின் சிலை/படத்தை வெளியில் வைக்க வேண்டாம். ஏனெனில் அது வீட்டில் இருந்து பணம் வெளியேறுவதாக கருதப்படுகிறது.

கற்றாழை:
கற்றாழை செடியை வீட்டில் நடக்கூடாது. ஏனென்றால் கற்றாழை ஒரு முள் செடி. அது உறவுகளில் விரிசல் கொண்டுவருகிறது. இதனால் வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். 

vastu tips

செயற்கை செடிகள்:
செயற்கை செடிகளையும் வீட்டில் வைக்கக்கூடாது. ஏனெனில் அவை எதிர்மறையை அதிகரிக்கும். அதனால்தான் வீட்டில் இயற்கையான பூக்களை நட முயற்சி செய்யுங்கள். குறிப்பாக செயற்கை அல்லது துணியால் செய்யப்பட்ட மலர் மாலையை கடவுள் சிலைக்கு அணிவிக்கக் கூடாது. மாறாக இயற்கை மலர்களால் ஆன மாலை அணிவிக்க வேண்டும்.

தாஜ் மஹால்:
இதன் எந்தவொரு ஷோ பீஸ் அல்லது படத்தையும் வீட்டில் வைக்கக்கூடாது. அது ஒரு கல்லறை. மேலும் இது மரணம் மற்றும் செயலற்ற தன்மையின் சின்னம். மக்கள் இதை அன்பின் சின்னமாக அங்கீகரித்தாலும், இது உண்மையில் மும்தாஜ் மஹாலின் கல்லறை. எனவே, மேலே குறிப்பிட்டுள்ள குறிப்புகளை நீங்கள் பின்பற்றினால் உங்கள் வீட்டில் இருகும் எதிர்மறை நீங்கும். இதனால் வீட்டில் செழிப்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

click me!