உங்க வீட்டுல பெட்டி பெட்டியாக பணம் குவியணுமா? இந்த 4 விஷயங்களை தவறாமல் பண்ணி பாருங்க!! நிச்சயம் பலன் உண்டு

First Published | Jun 23, 2023, 5:25 PM IST

பணம் சேர நாம் சில தந்திரங்களை தொடர்ந்து செய்தால் போதும். இறைவன் அருளால் நமக்கு பணம் சேர்ந்து கொண்டே இருக்குமாம். 

நாம் பாடுபட்டு சேர்த்த செல்வம் நிலைக்க கூட நாம் சில விஷயங்களை செய்ய வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. சிலருக்கு எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியாதும். கண் திருஷ்டி இருக்கும். பணத்தை சேமித்து நாம் மேன்மேலும் உயர என்ன செய்ய வேண்டும் என இந்து சாஸ்திரங்கள் சொல்லும் நான்கு விஷயங்களை இங்கு பார்க்கலாம்.

ராமனின் தீவிர பக்தனான அனுமனை வழிபாடு செய்யும்போது வீட்டின் செல்வம் உயரும் என்பது ஐதீகம். அணுமனை வழிபடும்போது அரச மர இலையில் 'ஸ்ரீராமஜெயம்' என்று எழுதி இனிப்புகளுடன் வைத்து வழிபடுங்கள். இதை செய்வதால் உங்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும். 'ஸ்ரீ ராம ஜெயம்' என்ற மந்திரத்திற்கு சக்தி அபாரமாக இருக்கும். உங்களுடைய கஷ்டங்கள் தீர்ந்து, செல்வ செழிப்பாக வாழ்வீர்கள்.

Tap to resize

நாள்தோறும் காலையில் எழுந்து மகாலட்சுமி வழிபாடு செய்வது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். சிவப்பு வண்ண பூக்களால் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்யலாம். குறிப்பாக செம்பருத்தி பூக்களை வைத்து அர்ச்சனை செய்யும் போது மகாலட்சுமி மனம் குளிர்ந்துவிடுவாள். இந்த வழிபாட்டின் போது பாலில் வெல்லம் கலந்து நிவேதனம் செய்து வர பொருளாதார நெருக்கடியில் இருந்து விரைவில் மீள்வீர்கள். 

தொடர்ந்து பண பிரச்சினைகள் உங்களுக்கு ஏற்பட்டால் கருமிளகு வைத்து பரிகாரம் செய்யுங்கள். நாள்தோறும் ஐந்து கரு மிளகினை கையால் எடுத்து ஒரு தூய துணியில் வைத்து தலையணைக்கு கீழே வைத்து தூங்குங்கள். மறுநாள் காலையில எழுந்ததும் குளித்து முடித்துவிட்டு, 'உங்களுக்கு செல்வம் சேர வேண்டும்' என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு அந்த மிளகு எடுத்து நான்கு தெரு சந்திக்கும் இடத்திற்கு சென்று ஒவ்வொன்றாக ஒவ்வொரு திசையிலும் தூக்கி எறியுங்கள். ஐந்தாவது மிளகை மட்டும் வானத்தை நோக்கி வீசிவிட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுங்கள். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யும்போது பண பிரச்சினைகள் நீங்கிவிடும்.

உங்களுடைய பொருளாதாரம் உயர்ந்து கோடீஸ்வரராக மாற வேண்டும் என்று நினைத்தால் நாள்தோறும் கனகதார ஸ்தோத்திரம் உச்சரிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதை தினமும் சொல்வதால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். உங்களுக்கு இருக்கும் பண பிரச்சனைகள் கூட விரைவில் நீங்கி செல்வம் செழிக்கும். 

Latest Videos

click me!